கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 09, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பேச்சுமொழியும் எழுத்துமொழியும் ஜூன் 16

7th tamil model notes of lesson

lesson plan 2025 june 16

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-06-2025 முதல் 20-06-2025

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதத் தமிழ் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

6.பக்கஎண்

8 - 12

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும், பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.

8.திறன்கள்

          பேச்சு மொழி, எழுத்து மொழியின் நுட்பங்களை அறியும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          தமிழ்மொழியின் பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு கூறுகளையும் அவற்றிற்கு இடையே  உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/7-7th-tamil-worksheer-with-pdf-ondralla.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1_11.html

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-ondralla-irandalla.html

https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_6.html

https://tamilthugal.blogspot.com/2022/06/udumalai-narayana-kavi.html

https://tamilthugal.blogspot.com/2023/02/kadaiyelu-vallalgal.html

https://tamilthugal.blogspot.com/2020/06/kadaiyezhu-vallalgal-tamil-kings.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-7th-tamil-worksheer-with-pdf.html

https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_30.html

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-pechumoliyum-eluthumoliyum.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1_21.html

11.ஆயத்தப்படுத்துதல்

          எழுத்துமொழியின் பேச்சு வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தமிழின் பெருமையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பேச்சுமொழியின் எழுத்து வடிவங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மொழியின் முதல்நிலை, இரண்டாம் நிலை, பேச்சுமொழியில் உள்ள பொருள் வேறுபாடு, அழுத்தம் கொடுத்தல், வட்டார வழக்குச் சொற்கள், கிளை மொழிகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு, இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழ் இரட்டை வழக்கு மொழி என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நாம் பயன்படுத்தும் பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதச் செய்தல்.

          குரல் ஏற்றத்தாழ்வுடன் பேசிப் பழகுதல்

15.மதிப்பீடு

          எ.சி.வி –       ஒலியின் வரிவடிவம் ............... ஆகும்.

          ந.சி.வி –       பேச்சு மொழி என்றால் என்ன?

உ.சி.வி –      இலக்கியங்கள் இன்னும் அழியாமல் வாழ என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          சிறந்த பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டல்.

          வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive