கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 08, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.06.2026 . திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

08.06.2026 . திங்கள்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம்: 43. அறிவுடைமை ;

குறள் எண் : 423.

குறள் :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே கொள்ளாமல், அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

பழமொழி :

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

Faith is the force of life.

இரண்டொழுக்க பண்புகள்:

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

* வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல.

Thought for the Day:

Responsibility is not a burden. It is an opportunity to prove your character.

பொது அறிவு:

1. தமிழ்நாடு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

ஜூலை 18.

2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்?

உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.

English words:

+ Avenue a road bordered by houses or trees, அழகான தெரு.

Believe - regard as true, நம்பு

NMMS:

→ அடுத்த உறுப்பைக் கண்டுபிடி

:- 4, 9, 19, 39,

(1) 59

(2) 69

(3) 79

(4) 74

விடை

(3) 79

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும்.

உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரே கோள் பூமி ஆகும்.

பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரும் 29% நிலமும் உள்ளன.

ஜூன் 08 - உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகார பூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

"சிறிய துளி, பெரிய பலன்"

ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரைச் சேமிக்க வேண்டும்" என்று கூறினார். அருண் அந்தப் பாடத்தைக் கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.

ஆனால் மீனா, "மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?" என்று நினைத்தாள். சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.

அதைப் பார்த்த மீனா, "நானும் மழைநீரைச் சேமித்திருக்க வேண்டும்!" என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள். அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரைச் சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.

நீதி:

"மழைநீரைச் சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையைப் பாதுகாப்போம்."

"சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்."

Today's Headlines - 08.06.2026

The Tamil Nadu government has announced that the Tamil Nadu Singa Penn Force will be launched on June 9.

The Central Government has stated that India has the lowest cooking gas (LPG) prices in the world.

North Korea has pledged to increase its missile production by 2.5 times.

Sports News

South Asian Women's Football Championship: The Indian team won the trophy.

Tamil Nadu chess player Savitha Shri, who won a gold medal at the Asian Chess Championship, was congratulated by Chief Minister Vijay.

இன்றைய செய்திகள் 08.06.2026

தமிழக சிங்கப் பெண் படை. ஜூன் 9 ல் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உலகளவில் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு விலை குறைவு மத்திய அரசு அறிவிப்பு.

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கப்படும் என வடகொரியா உறுதி.

விளையாட்டு செய்திகள்

* தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து.

தயாரிப்பு :

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive