பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
12.06.2026, வெள்ளி
திருக்குறள் :
பால்: பொருட்பால்
; இயல்: அரசியல் ;
அதிகாரம்: 43. அறிவுடைமை ;
குறள் எண் : 427.
குறள் :
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
பொருள்:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
பழமொழி :
யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே
Coming events cast their shadow before.
இரண்டொழுக்க பண்புகள் :
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
* தோல்வி வெற்றியின் தாய்.
Thought for the Day:
Today's responsibility creates opportunities tomorrow.
பொது அறிவு :
1.23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது?
கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.
2. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 24.
English words :
Essential - Necessary, அத்தியாவசியமான
Frequent - Regular, அடிக்கடி நிகழும்
NMMS:
XYW, UVT, RSQ, OPN,
(1) KLM. (2) LMK. (3) LKM.
(4) KML.
Pattern: 2nd, 3rd, 1st
1) correct order is WXY, according to the pattern XYW
2) correct order is TUV, according to the pattern UVT
3) correct order is QRS, according to the pattern RSQ
4) correct order is NOP, according to the pattern OPN
5) correct order is KLM, according to the pattern LMK
விடை: (2) LMK
புவியியலும் சுற்றுச்சூழலும் :
குடிமையியல்
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
ஜூன் 12 - குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்
AGAINST CHILD LABOUR
(World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182 வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
நீதிக்கதை -திருட்டு முட்டையும் திருந்திய ஓணானும்
ஒரு விவசாயியின் கோழிகள் இடும் முட்டைகளை ஒரு ஓணான் தினமும் திருடி தின்று வந்தது. அதன் மனைவியும் பிள்ளைகளும், "திருட்டு தவறு, ஒருநாள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும்" என்று எச்சரித்தும் அது கேட்கவில்லை.
ஒருநாள் விவசாயி ஒரு அவித்த முட்டையை கோழி அருகில் வைத்து விட்டார். வழக்கம்போல் வந்த ஓணான் அதை விழுங்கியது. அவித்த முட்டை வயிற்றில் சிக்கியதால் வேகமாக நகர முடியவில்லை. விவசாயி துரத்த, ஓணான் தன் பொந்திற்குள் ஓடியது. தலை மட்டும் உள்ளே சென்றது, ஆனால் உடல் வெளியே சிக்கிக் கொண்டது. விவசாயியிடம் அடியும் வாங்கியது.
அப்போது தான் தன் தவறை உணர்ந்த ஓணான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு இனி திருட மாட்டேன் என்று மனந்திருந்தியது. சிறிது நேரத்தில் முட்டை ஜீரணமாகி, அது பாதுகாப்பாக பொந்திற்குள் சென்றது. அதன்பின் திருட்டை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்ததாம்.
நீதி :
திருட்டின் சுகம் சில நாள்; அதன் துன்பம் பல நாள்.
தவறை உணர்ந்து திருந்துகிறவர்களுக்கு எப்போதும் ஒரு புதிய வாய்ப்பு உண்டு.
அறிவுரையைக் கேட்காதவன் அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்வான்.
Today's Headlines - 12.06.2026
Chief Minister Vijay emphasized at the NITI Aayog meeting that Tamil Nadu should be exempted from the NEET examination.
Prime Minister Narendra Modi said at the NITI Aayog meeting, "Let us all work together for the development of the nation."
The Iranian military announced that the Strait of Hormuz will be completely closed.
Sports News
New rules were introduced in the FIFA World Cup football tournament that began yesterday.
இன்றைய செய்திகள் - 12.06.2026
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்.
"நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்" என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
[ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.
*விளையாட்டுச் செய்திகள்
*நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து FIFA போட்டித் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகம்.
தயாரிப்பு :
Covai women ICT போதிமரம்
