கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, June 14, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆறாம் திணை ஜூன் 22 - 2026

9th tamil model notes of lesson

lesson plan June 22

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-06-2026 முதல் 25-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதென்று பேர் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

ஆறாம் திணை

6.பக்கஎண்

12 - 15

7.கற்றல் விளைவுகள்

T-9003 தமிழ் மொழியில் பதிவாகி உள்ள புலம்பெயர் தமிழர்களின் எழுத்துப் போக்கினையும் கருத்தினையும் படித்தல்.

8.திறன்கள்

தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களின் அவலத்தை அறிதல்.

9.நுண்திறன்கள்

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/06/1_1.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/blog-post_8.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/pdf_8.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த அயலகத் தமிழர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

முத்துலிங்கம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

முத்துலிங்கம் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          ஆறாம் திணை பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          அயலகத் தமிழரின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தாய்நாட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புலம்பெயர் தமிழர்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       அயலகத் தமிழர் நாள் ............................

          ந.சி.வி –       ஆறாம் திணையின் ஆசிரியர் யார்?

உ.சி.வி –      புலம்பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

தமிழர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive