கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 03, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திராவிட மொழிக்குடும்பம் ஜூன் 8

9th tamil model notes of lesson

lesson plan June 8

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதென்று பேர் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

திராவிட மொழிக்குடும்பம்

6.பக்கஎண்

4 - 9

7.கற்றல் விளைவுகள்

T-9001 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

திராவிட மொழியின் தொன்மை, தோற்றம், தனித்தன்மைகள் பற்றி அறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழின் சிறப்பை பிற மொழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கருத்துகளை அறிதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/09/9-1-thiravida-mozhi-kudumbam-9th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/03/16-best-qualities-of-tamil.html

https://tamilthugal.blogspot.com/2022/07/9-9th-big-question-thiravida-moli.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-thiravida.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த தென்னிந்திய மொழிகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

மொழி வரலாறு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

திராவிட மொழிக்குடும்பம் பாடப்பொருளின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். ச.அகத்தியலிங்கம், மாக்ஸ் முல்லர், ஹீராஸ் பாதிரியார், கால்டுவெல் குறித்து அறியச் செய்தல்.

          மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். திராவிட மொழிகளின் சொல் ஒற்றுமை பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், தமிழின் தனித்தன்மைகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழின் பழைமையான இலக்கிய இலக்கணங்களை அறியச் செய்தல்.

          தமிழின் தனித்தன்மைகளை அறிந்து வரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?

          ந.சி.வி –       திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை?

உ.சி.வி –      உயர்தனிச் செம்மொழியின் சிறப்பு இயல்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          மொழி ஆய்வாளர்களின் படங்களைத் தொகுத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive