கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 11, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11.06.2026. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

11.06.2026. வியாழன்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம்: 43. அறிவுடைமை ;

 குறள் எண் : 426.

குறள்:

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.

பொருள்:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

பழமொழி :

> துணிவுடையோர்க்கே வெற்றி.

Fortune favors the brave.

இரண்டொழுக்க பண்புகள்:

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

> பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது.

Thought for the Day:

- Responsibility is the bridge between goals and achievements.

பொது அறிவு :

1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்?

N.S.ராஜா சுப்பிரமணி.

2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்?

உயர் திரு. ஆர். குமார் அவர்கள்.

English words:

Benefit - Advantage, நன்மை 

+ Conceal - Hide, மறை

NMMS:

1, 7, 3, 63, 5, 215, 7,

(1) 342. (2) 511. (3) 517.

(4) 343.

1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன.

2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு

(முந்தைய எண் + 1)3 1

I) இரண்டாமிட எண்

(1+1)3 1 = (2) 1-8-1-7

II) நான்காமிட எண்

(3+1) 1= (4)3 164-1=63

III) ஆறாமிட எண்

(5+1)3 1= (6)3 1216-1 = 215

IV) எட்டாமிட எண்

(7+1) 1 = (8) 1512-1= 511

விடை: (2) 511

புவியியலும் சுற்றுசூழலும் :

"இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம்.

குடிமையியல் என்றால் என்ன?

குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும்.

ஜூன் 11

உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.

நீதிக்கதை

வீட்டுப் பாடத்தின் மதிப்பு

ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான். ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான்.

மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார். மணி மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அன்று மாலை மணி கோபியிடம், "நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?" என்று கேட்டான். கோபி சிரித்துக்கொண்டு, "வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது," என்றான்.

அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான்.

நீதி : வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன.

Today's Headlines 11.06.2026

Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations.

Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister.

In England, restrictions have been imposed on children using social media platforms. England.

Sports News

In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament.

In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu.

இன்றைய செய்திகள் 11.06.2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும் சாதனை படைத்தார் நரேந்திர மோடி.

இங்கிலாந்து நாட்டில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீ வெற்றி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பு

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive