பாதம்
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
திரையரங்க வாசலில் காலணி தைப்பவர் மாரி. காற்றும் மழையும் வலுத்ததால் அவர்
பசியுடன் காத்திருந்தார். காரணம் – எவரும் அவரை நாடி வரவில்லை. அப்போது ஒரு விந்தை
நிகழ்ந்தது. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மீன் போன்ற பெண்ணும் இளஞ்சிவப்புநிறக் காலணியும்
ஒரு
சந்திலிருந்து சிறுமியொருத்தி மீனைப்போன்று சுழன்று வந்தாள். இளம் சிவப்பு நிறக்
காலணியைத் தந்து தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டு மின்னலென மறைந்தாள். வெல்வெட்
தைத்துப் பூவேலைப்பாடுடன் இருந்த அக்காலணியில் சிறுமியின் பாதவாசனை
படிந்திருந்தது. கிழிசலைத் தைத்துவிட்டுக் கிடைக்கப்போகும் இரண்டு ரூபாய்க்காகக்
காத்திருந்தார் மாரி. ஆனால் அச்சிறுமி வரவேயில்லை.
விந்தைக் காலணியால் வந்தது வருமானம்
ஒருநாள் இரவு மாரியின் மனைவி கண்ணில்பட்டது
அக்காலணி. மகளை அணியச்செய்தாள், சரியாக இருந்தது. மற்றொன்றைத்
தேடிக்கொண்டிருக்கும்போது மாரி வந்துவிட்டார். கோபத்துடன் பறித்துத் துடைத்துப்
பையில் வைக்கும் முன் தானே அணிந்து பார்த்தார். சரியாக இருந்தது, வியந்தார்.
இச்செய்தி நகரில் பரவியது. அணிந்து பார்த்தவர் பணம் தந்தனர். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
முப்பது வருடத்திற்குப்பின் முடிந்தது கடமை
பார்வையாளர்கள் கொடுத்த பணம் பசு, வீடு
என்றானது. இப்படியாக முப்பது வருடங்கள் கடந்தன. ஆனால் இன்றாவது அவளிடம் காலணியை
ஒப்படைத்து விடமாட்டோமா என்ற ஏக்கம் மாரியிடம் இருந்தது. ஒரு மழை இரவில் நடுத்தர
வயதுப் பெண்மணி வந்தாள். வெகு தாமதமாகிவிட்டது, என் காலணியைத் தைத்து விட்டீர்களா? என்றாள். மகிழ்ந்தார் மாரி. இடக்கால் காலணி
அவள் கூடையில் இருந்தது. விந்தைக்காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும்
பொருந்துகிறதே! என்றார். கொடுத்தார், கூலி
பெற்றார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
காலணியைப் பறிக்க முயன்ற திருடர்கள்
தாக்கியதில் தளர்ந்திருந்த மாரி தன் கடமை முடிந்ததும் நிம்மதியானார். அப்பெண்
தைத்து வாங்கிய காலணி அவளுக்குச் சிறியதாகவே இருந்தது.