.
முடிவில் ஒரு தொடக்கம் - பெயர்க்காரணம்
பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும் வள்ளல் தன்மை அன்று. நம் இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மையே.
திருக்கழுக்குன்றம்
அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற
மருத்துவத் தம்பதியினரின் மகனுக்குச் சாலை விபத்தில் மூளை செயலிழப்பு
அடைந்துவிட்டது. பிறக்கும்போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டவன்
அவன். அத்தகைய அன்பு மகனின் இதயத்தை எடுத்துத் தேவைப்படும் யாருக்காவது பொருத்த
நாங்கள் சம்மதிக்கிறோம். எங்கள் மகனுக்கு வாழ்வு கொடுங்கள் ! அவனைச் சாக விடமாட்டோம்
என்று கதறினர்.
மருத்துவக்குழுவினர் விரைவாகச் செயல்பட்டனர். ஹிதேந்திரனின் இதயம் பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதயம் வலுவிழந்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஒரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. ஹிதேந்திரன் முடிவில் இதயம் கொடுத்து முடிவில் ஒரு தொடக்கமாய் சிறுமியுள் இன்றும் துடித்துக்கொண்டிருக்கிறார்.