வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு
முன்னுரை
விடுதலைப்போரில்
ஆண்களுக்கு நிகராக வாளெடுத்துப் போரிட்ட வீரமங்கை.
இராமநாதபுர மன்னர் செல்லமுத்துசேதுபதியின் ஒரே
வாரிசு. தன் கணவராம் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரைக் கொன்ற
ஆங்கிலேயரைப் பழிதீர்த்து, சிவகங்கையை மீட்டெடுத்த வேங்கை வேலுநாச்சியார்.
ஐதர் அலியின் உதவி
காளையார்கோவில் போரில் தன்
கணவரை நயவஞ்சகமாகக் கொன்ற ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்க திண்டுக்கல் கோட்டையில்
தங்கியிருந்தார். அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது உடனிருந்தனர். அப்போது ஐதர் அலி
மைசூரிலிருந்து அனுப்பிய 5000 குதிரைப்படை வீரர்கள் வந்துசேர்ந்தனர். உருது மொழியில்
ஐதர் அலியிடம் நாச்சியார் பேசியதில் மகிழ்ந்து படை அனுப்பி உதவியுள்ளார்.
குயிலியும் உடையாளும் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்கள், பெண்கள்
படைப்பிரிவுக்குக் குயிலி தலைமை ஏற்றனர். விஜயதசமித் திருநாளன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறந்தன. பெண்கள்
படை பழங்கள், பூக்கூடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்தபடி முதலில் நுழைந்தது. வேலுநாச்சியாரைக் காட்டிக்
கொடுக்க மறுத்ததால் உடையாள் என்பவர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார், அவரது நடுகல் முன்பு வணக்கம் செலுத்தினார்
நாச்சியார். மாறுவேடத்தில் கோட்டைக்குள் சென்ற குயிலி தன் உடலில் தீ வைத்துக்கொண்டு
ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்தார். அச்சமயத்தில் வேலுநாச்சியார் படையுடன்
கோட்டைக்குள் நுழைந்து ஆங்கிலேயரை வென்று பழிதீர்த்தார்.
முடிவுரை
பெண் என்ற போதிலும் சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில் பயிற்சி கற்றுத்தேர்ந்தவர் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி இவற்றுடன் குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்டெடுக்கப்பட்டது.