7th tamil model notes of lesson
lesson plan 2025 july 14
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
அணிநிழல் காடு – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
விலங்குகள் உலகம்
6.பக்கஎண்
35-38
7.கற்றல் விளைவுகள்
T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான
வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின்மூலம் தங்களின்
புரிதலை மேம்படுத்துதல்.
8.திறன்கள்
பல்லுயிர்களின்
வாழிடமான காடு குறித்தும் காட்டு விலங்குகள் குறித்தும் புலிகள் காப்பகம் வழி
அறியும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
முண்டன்துறை
புலிகள் காப்பகம் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/04/vandalur-zoo-animals-watch-online-camera.html
https://tamilthugal.blogspot.com/2023/07/1-2-7th-tamil-mind-map-vilankukal-ulakam.html
https://tamilthugal.blogspot.com/2022/07/1-2-7th-tamil-mindmap-term-1-unit-2_17.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்களுக்குப் பிடித்த
விலங்குகள் குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
காட்டின் பயன்களை
மாணவர்களைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
யானைகளின் வகைகள்,
தந்த அமைப்பு, உணவு, நீர், பண்புகள் பற்றியும், கரடி ஓர் அனைத்துண்ணி என்பதையும்
அதன் உணவுகள் குறித்தும், எடை 160 கிலோ என்பதையும் அறிதல். புலி குறித்த
தகவல்களையும் புலி பண்புள்ள விலங்கு என்பதையும் அதற்கான காரணங்களையும் அறிதல்.
மான்களின் வகைகள் குறித்தும் அதன் அழகையும் உணர்தல்.
விலங்குகளின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
விலங்குகள் காப்பகம் குறித்து
மாணவர்களுடன் உரையாடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
காட்டின்
சிறப்புகளை அறிந்து வரல்.
உங்கள் பகுதிகளில் உள்ள விலங்குகளின்
பெயர்களை அறிதல்.
சரணாலயங்கள் குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கரடிகளைத்
தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ....................
ந.சி.வி – எவையேனும் மூன்று
வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
உ.சி.வி – உனக்குப் பிடித்த
விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
காட்டுவிலங்குகளின்
படங்களைத் திரட்டுதல்.
ஏதேனும் ஒரு விலங்கு குறித்து வருணனையாக
5 தொடர்கள் எழுதுக.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத்
திரட்டுதல்.


