கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 16, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கேட்கிறதா என் குரல், பரிபாடல் ஜூலை 6 - 2026

10th tamil model notes of lesson

lesson plan 2026 july 6

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-07-2026 முதல் 10-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிரின் ஓசை – உரைநடை, கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

கேட்கிறதா என் குரல், பரிபாடல்.

6.பக்கஎண்

24 - 29

7.கற்றல் விளைவுகள்

T-1005 காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

T-1006 சங்கப்பாடலும் புதுக்கவிதையும் காட்சிப்படுத்தும் இயற்கை சார்ந்த செய்திகளைச் சுவைத்துத் தம் கருத்தைப் பதிவு செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

காற்றின் அவசியத்தை அறிதல்.

புவியின் உருவாக்கம் குறித்த இலக்கியப் பாடலை உணர்தல்.

9.நுண்திறன்கள்

சங்க இலக்கியத்தில் இயற்கை குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/06/pdf-2_14.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_21.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/pdf-2.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_27.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en_22.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-paripadal.html 

https://tamilthugal.blogspot.com/2022/08/paripadal-tenth-tamil-nedu-vina-vidai-q.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/4-10th-tamil-online-test-paripadal-one.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த காற்றின் வகைகளைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த அறிவியல் தகவல்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

இன்றைய அறிவியல் வளர்ச்சியை இலக்கிய வழி அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கேட்கிறதா என் குரல் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          காற்று மாசுபாடு, காற்றின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          காற்றின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          அண்டப் பெருவெளி குறித்து பரிபாடல் கூறும் தகவல்களை விளக்குதல். புவி உருவான வரலாற்றைப் பரிபாடல் வழி அறிதல்.





மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிகளை அறிந்து வரல்.

அறிவியலின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       விசும்பு என்பதன் பொருள் ...............

          ந.சி.வி –     பரிபாடல் – குறிப்பு வரைக.

உ.சி.வி –      நீர் தன்னைப்பற்றிப் பேசினால்.... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

காற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.

புவி உருவான வரலாற்றுக் கதைகளை அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive