கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 29, 2022

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு 12th Tamil second Revision test Answer key - March 2022

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு மார்ச் 2022

12th Tamil second Revision test Answer key - March 2022

மொழிப்பாடம் - பகுதி 1 - தமிழ்

கால அளவு : 3.00 மணி நேரம் ] 

[ மதிப்பெண்கள் : 90

அறிவுரைகள் :

(1)அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.. அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும். குறிப்பு : விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

1.சுரதா நடத்திய கவிதை இதழ் :

(அ) இலக்கியம்

(ஆ) காவியம்

(இ) ஊர்வலம்

(ஈ) விண்மீன்

விடை : ஆ) காவியம்

2.  ‘குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ?

(அ) இலக்கியம் 

(ஆ) கணிதம் 

(இ) புவியியல்

(ஈ) வேளாண்மை

விடை : (ஆ) கணிதம்

3.திருவருட்பாவை இயற்றியவர்

(அ) திருஞான சம்பந்தர் 

(ஆ) திருநாவுக்கரசர் 

(இ) சுந்தரர் 

(ஈ) இராமலிங்க அடிகள் 

விடை : (ஈ) இராமலிங்க அடிகள்

4.'மாமயிலை - இலக்கணக் குறிப்புத் தருக.

(அ) உரிச்சொற்றொடர் 

(ஆ) பண்புத்தொகை 

(இ) வினைத்தொகை 

(ஈ) இலக்கணப்போலி

விடை : அ) உரிச்சொற்றொடர்

5. தலைக்கோல் - புணர்ச்சி விதியை தேர்ந்தெடுக்கவும்ன 

(அ) இஈஐவழி யவ்வும்

(ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

(இ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

(ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

6.பொருத்துக :

(1) ஆமந்திரிகை -(i) பட்டத்து யானை 

(2) அரசு உவா   - (ii) மூங்கில்

(3) கழஞ்சு - (iii) இடக்கை வாத்தியம்

(4) கழை.   -  (iv) எடை அளவு

(அ) (1)-(iii). (2)-(i). (3)-(iv), (4)-(ii)

(ஆ) (1) -(iv), (2)-(ii), (3)-(i), (4)-(iii)

(இ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)

 (ஈ) (1)-(iv). (2)-(iii), (3)-(ii), (4)-(i)

விடை : அ) (1)-(iii). (2)-(i). (3)-(iv), (4)-(ii)

7.அல்லல் படுப்பதூஉம் இல் - எவரோடு பழகினால்?

(அ) வாள் போல் பகைவர்

(ஆ) மெய்பொருள் காண்பவர்

(இ) எண்ணியாங்கு எய்துபவர்

(ஈ) தீயினத்தார்

விடை : (ஈ) தீயினத்தார்

8. 'நித்திலம்' - என்பதன் பொருள் :

(அ) மாணிக்கம் 

(ஆ) பவளம் 

(இ) முத்து

(ஈ) மரகதம்

விடை : (இ) முத்து

9.ஆராய்ந்து சொல்கிறவர் :

(அ) அரசர் 

(ஆ) சொல்லியபடி செய்பவர் 

(இ) தூதுவர் 

(ஈ) உறவினர்

விடை : இ) தூதுவர்

10. 'தலைக்குளம்' எனும் சிறுகதையின் ஆசிரியர் :

(அ) பூமணி 

(ஆ) உத்தம சோழன் 

(இ) சாந்தா தத் 

(ஈ) தோப்பில் முகமது மீரான்

விடை : (ஈ) தோப்பில் முகமது மீரான்

11. விடுபட்ட சொல்லை நிரப்புக:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்_______

அச்சாணி அன்னார் உடைத்து,

(அ) இடன் அறிந்து 

(ஆ) உருள்பெருந்தேர்க்கு 

(இ) அஞ்சுக 

(ஈ) அறியவாம் 

விடை : (ஆ) உருள்பெருந்தேர்க்கு

12.இரண்டடி வெண்பா என்பது

(அ) குறள் வெண்பா 

(ஆ)சிந்தியல் வெண்பா 

(இ) இன்னிசை வெண்பா 

(ஈ) கலி வெண்பா 

விடை : (அ) குறள் வெண்பா 

13. "என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது"

(அ) மார்லன் பிராண்டோ

(ஆ) பாலச்சந்திரன்

(இ) வி.பி.கெ. மேனன்

(ஈ) ராஜீவ் நாத்

விடை : (அ) மார்லன் பிராண்டோ

14. சிவாஜி கணேசன் பிறந்த ஊர் :

(அ) விருத்தாசலம் 

(ஆ) விழுப்புரம் 

(இ) வீரப்பூர்

(ஈ) விராலிமலை

விடை : (ஆ) விழுப்புரம்

பகுதி - I 

பிரிவு - 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 

15. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக.

ஒருமுக எழினி:

நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

பொருமுக எழினி:

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

16. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே' ' தொடருக்குப் பதவுரை எழுதுக,

அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

17. மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன் ?

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” ,,,,,,,,,,,

மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.

மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

18. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.

கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா

ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

19. அக்காலத்துக் கல்விமுறை மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை ?

தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.

கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்

20. நல்ல தமிழில் எழுதுக.

(அ) வித்தியாரம்பம் - கல்வியின் தொடக்கம் 

(ஆ) உபாத்தியாயர்  - ஆசிரியர் 

21. 'குருகுலம்'  விளக்கம் தருக.

பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

பிரிவு - 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

22. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

(அ) எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது. 

விடை : 

எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது

(ஆ) ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.

விடை 

ஐப்பசி அடைமழையில் ஊருணி  நிறைந்தது.

23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்கவும் : 

(ஆ) தலைமை

ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது
(அ) கோவில் 

கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.
அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.24. தமிழ்ப்படுத்துக :
(அ) PASS PORT  - கடவுச்சீட்டு

(ஆ) VISA - நுழைவு இசைவு

25. ஏதேனும் ஒன்றனுக்குப் புகுபத உறுப்பிலக்கணம் தருக. 

(அ) நினைக்கின்ற 

(ஆ) பேசுவார்.

26. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக. 

(அ) பூம்பாவாய் 

(ஆ) உள்ளொன்று

27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக்குக :

(ஐ, ஆல், கு, இன், அது, கண்) 

(அ) கபிலன் திறமையானவர் என்று குமரனுக்கு (குமரன்) தெரியும்..

(ஆ) நேற்று முதல் அணையின் (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

28. பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்கவும் :

களம், கலம் 

29. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதக.

குதிரை, வேகம், ஓடு, தாவு

30. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் .

விடை : இரவு சிற்றப்பனை காவலுக்குப் போகச் சொல் .

பகுதி - I 

பிரிவு - 1.

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 

31. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

32. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :

“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :

பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :

“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”

நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :

கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

33. மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் யாவை ?


34. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்கவும்.

“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவது ஒன்று இல்”

சூதின் சிறுமை :

இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை.

“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்”

சூதால் செல்வம் அழியும் :

தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண் பும் கெட்டழியும்.

கள்ளும் விஷமும் ஒன்றே :

உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண் 11 பவர் விஷம் உண்பவர் ஆவார்.

திருத்தமுடியாது :

கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.           35. நீங்கள் ஆசிரியரானால் அன்பினால் மாணாக்கரை எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள் ?

(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.

(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.

(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.

(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.

(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.

(vi) மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.

(vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.

36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்கவும்.

37. உவே.சா பற்றிக் குறிப்பு வரைக. 

38. 'மையாடல்' பற்றி விளக்குக.

மையாடல் விழா :

(i) சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

(ii) இவ்வாறு தடவும் மையானது சுவடியில் இருக்கும் எழுத்துகளை விளக்கமாகக் காட்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

(iii) இதனாலேயே அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தலை) மையாடல் விழா என்றனர்.

பிரிவு - 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. ' 

39. உவமை அணி 

(அல்லது) 

சொற்பொருள் பின்வரும் நிலையணியைச் சான்றுடன் விளக்குக. 

40. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக. 

(அ) யானைக்கும் அடி சறுக்கும்

தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.

அல்லது

(ஆ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

41. இலக்கிய நயம் பாராட்டுக :

(மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக) 

அந்தி யிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன். 

திசைகள் கண்டேன் பிந்தியந்தக்

 காரிருள்தான் சிரித்த துண்டோ ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே

 நீதான் சிந்தாமல் சிதறாமல் அழகை யெல் ாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் 

ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை 

வானில் எழில் வாழ்வைச் 

சித்தரித்த வண்ணந் தானோ ?

பாரதிதாசன்

42. கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பார்த்து, பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா ? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா ? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சித்திக்க முயன்றதும் கிடையாது. 

விடை 

அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது.

43. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்குரிய விடை தருக.

'உணவே மருந்து மருந்தே உணவு" என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள், ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கன், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும் பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணிநேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

வினாக்கள்:

(1) நம் முன்னோர்கள் வாழ்க்கைமுறை எத்தகையது?

'உணவே மருந்து மருந்தே உணவு" என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்

(2) சமச்சீர் உணவு என்பது யாது ?

ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கன், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு.

(3) பிணிகளுக்குக் காரணம் யாது ?

ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும் பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம்

(4) உணவு செரிமானமாக ஆகும் நேரம் எவ்வளவு ?

4 மணிநேரம்

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

44. (அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைதிற்கும் என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.

அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :

”அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.”

அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.”

மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.


“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு”

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்”

பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.


திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.

விடை:

முன்னுரை 

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடைமை :

இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும்.

ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

மன உறுதி வேண்டும் :

அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.

கள்உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண் ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.

அல்லது

(ஆ) கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்கவும்...

கவிதை :

சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.

அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.

சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள் :

எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.

அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.

சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.

இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.

அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

சிறந்த கவிதை :

(i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.

(ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.

(iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

45. (அ) பண்டைக் காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

(i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

(ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.

(iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.

(iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.

(v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

(vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

(vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.

(viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.

(ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும்” – நன்னூல் 41

(x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

(xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

அல்லது

(ஆ) மனனப் பயிற்சி, சுவடிகள், எழுந்தாணிகள் குறித்து உவே.சா குறிப்பிடுவனவற்றை விவரிக்கவும்.

46. (அ) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்கவும்.

அல்லது

(ஆ) மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.

பகுதி - V

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 

(அ) 'ஒருமையுடன்......." எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை அடிபிறழாமல் எழுதுக, 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை

பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாதிருக்க வேண்டும்

(ஆ) 'செயல்' என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.


சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

தமிழ்த்துகள்

Blog Archive