கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, August 31, 2022

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 எச்சம் மனவரைபடம் 8th tamil mindmap unit 3

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 வழக்கு மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 3


 

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 மொழி முதல் இறுதி எழுத்துகள் மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 3


 

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 வழக்கு 7th model notes of lesson tamil unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-09-2022 முதல் 09-09-2022

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வழக்கு

6.பக்கஎண்

67- 70

7.கற்றல் விளைவுகள்

T-720 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது, பொருத்தமான சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக்கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்.

8.திறன்கள்

சொற்கள் மற்றும்  தொடர்களில் பயின்றுவரும் வினைமுற்றுகளை அறிந்து பயன்படுத்தும் திறன்.

9.நுண்திறன்கள்

வழக்குச் சொற்கள், போலி போன்றவற்றைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/06/7-1-3-vazhakku-poli-7th-tamil-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-3-valakku-7th-tamil-ilakkanam-vazhaku.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_74.html

https://tamilthugal.blogspot.com/2021/05/boli-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/poli-tamil-ilakkanam.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த ஊர்களின் சுருக்கப் பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வழக்குச் சொற்களைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தகுதி வழக்கு, இயல்பு வழக்கு இவற்றின் வகைகளைக் கூறி உதாரணங்களுடன் விளக்குதல். போலியையும் அதன் வகைகளையும் எடுத்துக்காட்டுகள் மூலம் புரிய வைத்தல்.

          மாணவர்கள் அறிந்த குழூஉக்குறிச் சொற்களைக் கூறச்செய்தல். ஐந்து – அஞ்சு முற்றுப்போலியாக நாம் பயன்படுத்தும் பிற சொற்களை அறிந்து வரச் செய்தல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இடக்கரடக்கல், மங்கலம், மரூஉச் சொற்களைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்.

15.மதிப்பீடு

          LOT – வழக்கு .............................. வகைப்படும்.

          MOT – தகுதி வழக்கின் வகைகளை எழுதுக.

HOT நன்காடு என்பது எவ்வாறு மங்கல வழக்குச் சொல்லுக்கு உதாரணமாகும் என விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

குழூஉக்குறிச் சொற்கள் எங்கெங்கெல்லாம் பயன்படும் என்று சிந்தித்து எழுதுக.


6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 மொழி முதல் இறுதி எழுத்துகள் 6th model notes of lesson tamil unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-09-2022 முதல் 09-09-2022

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

எந்திர உலகம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

மொழி முதல், இறுதி எழுத்துகள்

6.பக்கஎண்

69-71

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.திறன்கள்

தமிழில் பிழையின்றி எழுதும் திறன்

9.நுண்திறன்கள்

மொழி முதல் இறுதி எழுத்துகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/05/3.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-3-6th-tamil-q.html

https://tamilthugal.blogspot.com/2020/06/11.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தமிழ்ச் சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மொழி முதல் இறுதி எழுத்துகளைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், வராத எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், இறுதியாகா எழுத்துகள், சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் பற்றிக் கூறி அவற்றுக்கு உதாரணங்கள் தந்து விளக்குதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களஞ்சியத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து ..............................

          MOT – மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

          HOT – ஞ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

க வரிசை எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டுகள் 12 எழுதுக.


ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 9th tamil Quarterly model question 1 sep22





காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 ஒன்பதாம் வகுப்பு தமிழ் pdf 9th quarterly model exam question paper 2022

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, August 28, 2022

ஏழாம் வகுப்பு பருவம் 1 இயல் 3 விரிவானம் வ.உ.சிதம்பரனார் வினா விடை 7th Tamil virivanam question answer


 

நான் விரும்பும் தலைவர் தமிழ்க்கட்டுரை வகுப்பு 6, 7 NAAN VIRUMBUM THALAIVAR TAMIL KATTURAI ESSAY 6TH, 7TH TAMIL PDF

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10th tamil Quarterly model question 1 sep 22




காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 பத்தாம் வகுப்பு தமிழ் pdf 10th quarterly model exam question paper 2022

 பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் பருவம் 1 pdf 6th tamil memory poems term 1

 பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, August 25, 2022

புதிய நம்பிக்கை பத்தாம் வகுப்பு தமிழ் விரிவானம் 10th tamil puthiya nambikai


 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 எச்சம் 8th model notes of lesson tamil unit 3

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 புதிய நம்பிக்கை 10th model notes of lesson tamil unit 5

இணைய வளங்கள்




ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 4 விண்ணையும் சாடுவோம் 9th model notes of lesson tamil unit 4

இணைய வளங்கள்




தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் 2022 PRIVATE 8TH GOVT PUBLIC EXAM TIME TABLE

Wednesday, August 24, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 ஒளி பிறந்தது 6th model notes of lesson tamil unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-08-2022 முதல் 02-09-2022

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

எந்திர உலகம் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

ஒளி பிறந்தது

6.பக்கஎண்

64-68

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.திறன்கள்

நவீன அறிவியல் பற்றி அறியும் திறன்

9.நுண்திறன்கள்

வளர்ந்துவரும் அறிவியல், தொழில் நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/08/1-3-oli-piranthathu-6th-katturai.html

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-6th-tamil-mindmap-term-1-unit-3_23.html

https://tamilthugal.blogspot.com/2021/08/1-3-oli-piranthathu-6th-katturai-vina.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த நவீன தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

நவீன அறிவியலின் வளர்ச்சியைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

அப்துல் கலாம்  அவர்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

அப்துல் கலாம் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் குறித்து விளக்குதல். கலாம் அவர்கள் மகிழ்ந்த நிகழ்ச்சியை மாணவர்களுக்குக் கூறுதல். சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக கலாம் கருதுவதை விளக்குதல். மாணவர்களே முதல் விஞ்ஞானிகள் என்பதை உணர்த்துதல்.

வெற்றியை அடையும் வழிகளைப்பற்றி கலாம் அவர்கள் கூறியதை விளக்குதல். அப்துல் கலாம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறுதல். நேர்காணல் குறித்து அறிதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அறிவியல் சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். நேர்காணல் குறித்து அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – கலாம் அவர்களுக்குப் பிடித்த நூல் ..............................

          MOT – வெற்றியை அடையும் வழிகளாக அப்துல் கலாம் அவர்கள் கூறியவை எவை?

          HOT – அப்துல் கலாமிடம் உனக்குப் பிடித்த குணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

அப்துல் கலாமிடம் நீ கேட்க விரும்பும் வினாக்கள் 5 எழுதுக.

 


7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 கப்பலோட்டிய தமிழர் 7th model notes of lesson tamil unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-08-2022 முதல் 02-09-2022

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

கப்பலோட்டிய தமிழர்

6.பக்கஎண்

63-66

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.திறன்கள்

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவரைப் பற்றி அறியும் திறன்

நாட்டுக்குழைத்த தலைவர்களின் வரலாறு மூலம் தமிழர் நாட்டுப்பற்றை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/08/kappalottiya-tamilar-7th-virivaanam-pdf.html

https://tamilthugal.blogspot.com/2020/04/kappalottiya-thamilar-v-o-chidambaranar.html

https://tamilthugal.blogspot.com/2021/08/kappalottiya-tamilar-7th-virivaanam.html

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-7th-tamil-mindmap-term-1-unit-3_23.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் வீரத்தைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

வ.உ.சிதம்பரனார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சுதேசக் கப்பல் கம்பெனி குறித்த தகவல்களை மாணவர்களிடம் கூறுதல். திலகர், பாரதியார் குறித்த தகவல்களை விளக்குதல். வந்தேமாதரம் என்ற சொல்லின் வலிமையை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          சிதம்பரனார் சிறையில் படித்த நூல்கள், எழுதிய நூல்கள் பற்றிக் கூறுதல். நூல்கள் வாசிக்கும் பழக்கத்தின் அவசியத்தைக் கூறுதல். நாட்டுப்பற்றில் தமிழரின் பங்கை அறிதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விடுதலைப் போராட்டங்களை அறியச் செய்தல். தமிழரின் நாட்டுப்பற்றை உணரச் செய்தல். விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்தல்.

15.மதிப்பீடு

          LOT – கப்பலோட்டிய தமிழர் எனப்படுபவர் ..............................

          MOT – சிதம்பரனார் குறித்த தகவல்களை எழுதுக.

HOT உனக்குப் பிடித்த விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து எழுதுக.

வ.உ.சிதம்பரனார் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 3 தலைக்குள் ஓர் உலகம் 8th model notes of lesson tamil unit 3

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-08-2022 முதல் 02-09-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உடலை ஓம்புமின் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

தலைக்குள் ஓர் உலகம்

6.பக்கஎண்

59-62

7.கற்றல் விளைவுகள்

T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

8.திறன்கள்

மூளையின் செயல்பாடுகளை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

மூளையின் செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulagam-8th-q.html

https://tamilthugal.blogspot.com/2022/08/8th-tamil-thalaikul-or-ulagam.html

https://tamilthugal.blogspot.com/2021/08/3-thalaikul-or-ulakam-8th-virivanam.html

https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_23.html

11.ஆயத்தப்படுத்துதல்

உடல் உள்ளுறுப்புகளைக் கூறச்செய்தல்.

மூளையின் செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மனித மூளையின் செயல்பாடுகளை அறிமுகப்படுத்துதல்.

சுஜாதாவை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மூளையின் அமைப்பு, உணவு, உடல் இயக்கம், வலதும் இடதும், உணர்வுகளும், நினைவாற்றலும், தன்னுணர்வும், அன்றாட நிகழ்வுகளும், கற்றலும் குறித்த விரிவான தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

          மூளையின் முக்கியத்துவம் குறித்த தகவல்களைக் கூறுதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மூளை குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – சுஜாதாவின் இயற்பெயர் ..............................

          MOT – மூளையின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

          HOT மூளை குறித்து நீ கேட்க விரும்பும் 5 வினாக்களை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மூளை குறித்த பிற தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive