ஒளவை என்ற சொல்லின் பொருள்
ஔவை அல்லது அவ்வை என்ற சொல் "அவ்வா" என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்.
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கிற்றுப் போலும்.
ஔவையார் என்னும் பெயர் கண்ட புலவர்கள் பலர் இருந்தனர்.
நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய நூல்கள்
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை.