கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 31, 2022

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 6 கொங்குநாட்டு வணிகம் 8th model notes of lesson tamil unit 6

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

7-11-2022 முதல் 11-11-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

வையம்புகழ் வணிகம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

கொங்குநாட்டு வணிகம்

6.பக்கஎண்

127 – 132

கற்றல் விளைவுகள்

T-813. தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல், பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.

8.திறன்கள்

தொழில்களின் வகைகளை உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

கொங்குநாட்டின் வணிகம் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6_31.html

https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-konku-naattu-vanikam.html

https://tamilthugal.blogspot.com/2020/10/tamilnadu-places-and-specials.html

11.ஆயத்தப்படுத்துதல்

வணிகம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

ஊர்களின் சிறப்புப் பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மாவட்டப் பெருமையை அறிமுகப்படுத்துதல்.

வணிகம் குறித்து அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சேர நாட்டின் எல்லைகள், கொங்கு மண்டலம், பழங்கால வணிகம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த வணிகம் குறித்துக் கூறச்செய்தல். ஊர்களின் சிறப்புப் பெயர்களை விளக்குதல். மாணவர்கள் அறிந்த வணிகத்தின் நன்மைகளைக் கூறச்செய்தல். வணிகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.


 

மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வணிகத்தின் இன்றைய வளர்ச்சி குறித்துக் கூறுதல். வணிகத்தின் அவசியம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – சேரர்களின் தலைநகரம் ..............................

                   மாங்கனி நகரம் எனப்படுவது .....................................

          MOT – கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

                   கரூர் மாவட்டம் குறித்து எழுதுக.

          HOT – மக்களின் வளர்ச்சிக்கு வணிகம் தவிர உதவுபவைகளைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் மாவட்டம் குறித்த செய்திகளை எழுதுக.

பல்வேறு மாவட்டச் சிறப்புகளை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 2 இன்பத்தமிழ்க் கல்வி, அழியாச் செல்வம் 7th model notes of lesson tamil unit 2

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

7-11-2022 முதல் 11-11-2022

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

வாழ்விக்கும் கல்வி

6.பக்கஎண்

31-35

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.திறன்கள்

கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

கல்வியின் இன்றியமையாமையை அறிதல்.

அழியாத செல்வம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/7-2-2-7th-vazhvikkum-kalvi-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_31.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த கல்வி குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் முக்கியத்துவத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் பெருமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          காலமறிதல், அழியாச்செல்வம், ஒளிவிளக்கு, கற்றவரும் கல்லாதவரும், கல்வியும் பள்ளியும், கற்க கசடற குறித்து விளக்குதல். கல்வியை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்தல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.


 

மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வியின் அவசியத்தை அறிதல். கல்வியின் சிறப்பைக் கூறுதல். எப்படிக் கற்க வேண்டும் என்பதை உணர்த்துதல்.

15.மதிப்பீடு

          LOT – கல்வியில்லாத நாடு .............................. வீடு.

                   பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் ....................................

          MOT – நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

                   கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.

HOT – நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வி தொடர்பான பாடல் வரிகளை எழுதுக.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive