ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
31-10-2022 முதல் 4-11-2022
2.பருவம்
2
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
பாடறிந்து ஒழுகுதல் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஆசாரக்கோவை, கண்மணியே கண்ணுறங்கு
6.பக்கஎண்
24-28
7.கற்றல் விளைவுகள்
T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.
8.திறன்கள்
நல்லொழுக்கப் பண்புகளை அறியும் திறன்
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும் நாகரிகம், பண்பாட்டினை அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
அறநூல்கள் தரும் நல்லொழுக்கங்களை அறிந்துகொள்ள முயலும் திறன்.
தமிழர்களின் வாழ்க்கைமுறை, தாலாட்டு குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/10/qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2022/06/peruvayin-mulliyar.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-6th-tamil-mindmap-term-2-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-6th-tamil-aasaarakovai-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-6th-tamil-kanmaniye-kannurangu.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_15.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-6th-tamil-mindmap-term-2-unit-2_26.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-kanmaniye-kannurangu.html
11.ஆயத்தப்படுத்துதல்
ஒழுக்கத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த தாலாட்டுப் பாடல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
ஒழுக்கமுடையவரின் பெருமையைக் கூறுதல்.
வாய்மொழி இலக்கியங்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசாரக்கோவை கூறும் நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பைக் கூறுதல்.
தாலாட்டுப் பாடலை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.
ஒழுக்கங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மூவேந்தர் குறித்தும் தாலாட்டு குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
ஒழுக்கத்தின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். வாய்மொழி இலக்கியங்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – ஒப்புரவு என்பதன் பொருள் ..............................
முக்கனி எனப்படுபவை ....................................
MOT – ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
HOT – உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகள் குறித்து எழுதுக.
குழந்தையைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் சொற்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள் 5 எழுதுக.
தாலாட்டு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.