ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
26-10-2022 முதல் 28-10-2022
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அறிவியல் ஆக்கம் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
ஆழ்கடலின் அடியில், இலக்கிய வகைச் சொற்கள்
6.பக்கஎண்
14-20
7.கற்றல் விளைவுகள்
T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.
T-720 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது, பொருத்தமான சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக்கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
8.திறன்கள்
மொழிபெயர்ப்புப் புதினத்தைப் படித்தறிந்து, கதையைச் சுருக்கமாகச் சுவைபட எடுத்துரைத்தல்.
மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கிய வகைச் சொற்களைக் கண்டறிதல்.
9.நுண்திறன்கள்
நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து அறியும் திறன்.
இலக்கிய வகைச் சொற்கள் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1_18.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_8.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1_33.html
https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-ilakiya-vakai-sorkal-7th.html
https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-1-7th-tamil-ilakanam-ilakiya-vagai.html
11.ஆயத்தப்படுத்துதல்
நீர்மூழ்கிக் கப்பல் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த சொற்களின் வகை குறித்துக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
ஆழ்கடலின் அடியில் கதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
சொற்களின் வகைகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆழ்கடலின் அடியில் கதையை மாணவர்கள் உணரும் வகையில் கூறுதல். மாணவர்களின் கருத்துகளைக் கேட்டல். தீவு, புதையல், எரிமலை, முத்துக்குளித்தல், சுறா குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
இலக்கிய வகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். மாணவர்களை மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் கூறச் செய்தல். ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் குறித்து கலந்துரையாடுதல்.
மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், நீர்மூழ்கிக் கப்பல் குறித்து உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
கற்பனைக் கதை படிக்கும், எழுதும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். இலக்கிய வகைச் சொற்கள் குறித்து அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – நால்வகைச் சொற்களை எழுது.
MOT – திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
HOT – கடல்பயணம் குறித்த ஒரு கற்பனைக் கதையை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நாளிதழ் செய்தியில் நால்வகைச் சொற்களை இனங்காணுதல்.
நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.