கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 18, 2022

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 1 நூலகம் நோக்கி, இன எழுத்துகள் 6th model notes of lesson tamil unit 1

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

26-10-2022 முதல் 28-10-2022

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

கண்ணெனத் தகும் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

நூலகம் நோக்கி, இன எழுத்துகள்

6.பக்கஎண்

11-16

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.திறன்கள்

நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

சொற்களில் எழுத்துகள் அமையும் முறையை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து அறியும் திறன்.

இன எழுத்துகள் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

 இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_47.html 
https://tamilthugal.blogspot.com/2020/06/8-library-tamil-essay-8th-tamil-poth.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1_2.html

https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-1-yina-ezhuthugal-sixth-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-ina-eluthukal-6th-tamil-ilakkanam.html

11.ஆயத்தப்படுத்துதல்

நூலகம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த மெய்யெழுத்துகள் வகை குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

மெய்யெழுத்துகளின் வகைகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நூலகத்தின் எட்டுத் தளங்களைக் கூறி மாணவர்களுடன் கலந்துரையாடல். நூலகத்தின் முக்கியத்துவத்தைக் கூறுதல். நடமாடும் நூலகம் குறித்து விளக்குதல். மாணவர்கள் படித்த புத்தகம் குறித்துக் கூறச் செய்தல்.

          ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் இவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் என்பதை விளக்குதல். மாணவர்களை வல்லின, மெல்லின, இடையின குழுக்களாகப் பிரித்து இன எழுத்துகளைக் கூறி விளக்குதல். 

 

          மனவரைபடங்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், நூலகம் குறித்து உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நூலகம் செல்லும் பழக்கத்தை, வாசிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். இன எழுத்துகளை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – நூலகவியலின் தந்தை எனப்படுபவர் ..............................

                   மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை ....................................

          MOT – அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து நீ அறிந்தவற்றைக் கூறுக.

                   இன எழுத்துகளை விளக்குக.

          HOT – நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த புத்தகம் குறித்து எழுதுக.

                   கவிதைப்பேழையில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் வீட்டில் நூலகம் உருவாக்க, உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் 5 எழுதுக.

நூலகம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.




தமிழ்த்துகள்

Blog Archive