ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
17-10-2022 முதல் 21-10-2022
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
கண்ணெனத் தகும் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
கல்விக்கண் திறந்தவர்
6.பக்கஎண்
7-10
7.கற்றல் விளைவுகள்
T-604 வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்றவற்றில் தாங்கள் கேட்ட, பார்த்த, படித்த செய்திகளைத் தங்களின் சொந்த மொழிநடையில் கூறுதல்.
8.திறன்கள்
கல்விப்பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராசர் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post_7.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6_7.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-6th-kalvi-kan-thiranthavar.html
https://tamilthugal.blogspot.com/2021/07/100-kamarajar-100.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1.html
11.ஆயத்தப்படுத்துதல்
கல்விக் கண் திறந்தவர் யார் எனக் கேட்டல்.
மாணவர்கள் அறிந்த தமிழக முதல்வர்கள் குறித்துக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
காமராசர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
காமராசரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி மாணவர்களுடன் கலந்துரையாடல். காமராசரின் சிறப்புப் பெயர்களைக் கூறுதல். காமராசரின் கல்விப் பணிகள் குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், காமராசர் குறித்து உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
கல்வியின் பெருமையை மாணவர்களிடம் உருவாக்குதல். காமராசரின் கல்விப் பணிகளை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – பெருந்தலைவர் எனப்படுபவர் ..............................
காமராசர் பிறந்த ஊர் ....................................
MOT – காமராசரின் கல்விப் பணிகள் யாவை?
மதிய உணவுத் திட்டத்தை விளக்குக.
HOT – நீங்கள் முதலமைச்சரானால் கல்விக்காக என்ன செய்வீர்கள் என எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
அரசின் மாணவர் நலத் திட்டங்கள் 5 எழுதுக.
காமராசர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.