கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 06, 2022

கருணையுடன் முன்னேறுதல் தமிழ்க் கட்டுரை பேச்சு karunaiyudan munneruthal tamil katturai speech

 

கருணையுடன் முன்னேறுதல்

முன்னுரை                              தமிழ்த்துகள்

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். "என் கடன் பணி செய்து கிடப்பதுவே" என்றார் நாவுக்கரசர், "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறோன்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர். அன்பும் கருணையும் தான் இந்த உலகை வழி நடத்திக் கொண்டிருக்கின்றது. கருணை இல்லாத உள்ளங்கள் கடவுள் உறையாத வெற்று உடல்கள். கருணை கொண்ட மனிதனாய் முன்னேறுவது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கருணையும் பரிசும்                                 தமிழ்த்துகள்

தீண்டாமை ஒரு பாவச் செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் என்பதை இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல இவ்வுலகுக்கும் சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக அவர் அகிம்சை முறையில் போராடி வெற்றி தேடித் தந்தார். தில்லையாடி வள்ளியம்மையிடம் தமிழ் கற்றார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று விட்டு இந்தியாவுக்கு வந்து வக்கீல் தொழில் செய்து எல்லோரையும் போல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் சாதாரணமான மனிதராகத்தான் இருந்திருப்பார்.                           தமிழ்த்துகள்

ஆனால் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர், காந்தி என்னும் சாந்தமூர்த்தி தேர்ந்து கண்ட செந்நெறி என்று பாடினார் நாமக்கல் கவிஞர். ஆங்கிலேயரிடம் வாங்கிய தடியடி தாங்கிய தன்னலம் அற்ற அவரின் தியாக உள்ளம் அவருக்கு தேசப்பிதா என்ற பெருமையைத் தேடித் தந்தது.

கருணை உள்ளம் கடவுள் இல்லம்

ஏழைகளுக்கும் ஆதரவு அற்றவர்களுக்கும் பிணி உற்றவர்களுக்கும் அன்றைக்கு வடலூரில் அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைத் தீர்த்து வருகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறது மணிமேகலை. பசித்த வயிறும் நோயால் வாடிய உயிரும் உதவியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது கருணைக் கண்களோடு அணுகக் கூடியவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.                             தமிழ்த்துகள்

அன்னை தெரசாவின் அருஞ்செயல்

வெளிநாட்டவராக இருந்தாலும் வங்காளத்தின் தெருக்களில் தொழு நோயாளிகளாக இருந்தவர்களை அன்போடு அணுகி அவர்களுக்கு சிகிச்சை அளித்தவர் அன்னை தெரசா. அதனால்தான் இன்றைய புதுக்கவிஞர் ஒருவர்

அன்னை தெரசாவே I                               தமிழ்த்துகள்

அன்று நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தான்

தாயாகி இருப்பாய்,

கருணை உற்றதால்தான்

எங்கள் எல்லோருக்கும்

தாயாகி விட்டாய் என்று பாடியுள்ளார்.                  தமிழ்த்துகள்

ஒருமுறை அனாதைக் குழந்தைகளுக்காக உதவி கேட்டு செல்வந்தர் ஒருவரிடம் கையேந்த அவரோ கையில் எச்சிலை உமிழ்ந்தாராம். எச்சிலைத் துடைத்து விட்டு, எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டீர்கள் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று மீண்டும் கையேந்தினாராம். அன்னை தெரசாவின் இந்தச் செயலால் வருத்தமுற்ற செல்வந்தர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாராம். பின்பு அந்த அனாதை இல்லத்திற்கு வேண்டிய பொருள் உதவி செய்திருக்கிறார்.

சங்ககாலத்தின் கருணை வள்ளல்கள்

பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, எழினி, பேகன் என்பவர்களைக் கடையெழு வள்ளல்கள் வரிசையில் வைத்துப் போற்றுகின்றோம். குளிரில் நடுங்கிய மயிலின் துன்பத்தைப் பொறுக்க இயலாத பேகன் போர்வை தந்து உதவினான். முல்லைக் கொடியின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக கருதிய பாரிவள்ளல் தன்னுடைய தேரையே அதற்கு ஆதரவாக நிறுத்திவிட்டு அரண்மனைக்கு நடந்தே சென்றான்.                 தமிழ்த்துகள்

ஒரு புறாவுக்காகத் தன்னுடைய சதையையே அறுத்துக் கொடுத்து, பறவைகளின் மீதும் கருணை உண்டு என்று நிரூபித்தான் சிபிச் சக்கரவர்த்தி. ஒரு பசுவின் கண்ணீருக்காக அதன் கன்றை இழந்து அது வருந்தும் துயரைத் தானும் பட வேண்டும் என்ற உயரிய நீதியில் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனுநீதிச் சோழன். அன்பும் கருணையும் நீதியும் நிலைபெற்று வாழ்ந்த ஒரு சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி

பன்னரிய பல பாடு படும்போதும் பரிந்து எந்தாய்            தமிழ்த்துகள்

இன்னதென அறிகில்லார் தான் செய்வது இவர் பிழையை

மன்னியும் என்று எழில் கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல் - என்கிறது இரட்சணிய யாத்திரிகம்.

பகைவருக்கும் அருள்வாய் நெஞ்சே என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றதை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது. சாதி மத இன மொழி வேறுபாடு இன்றி அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் பலம் என்பதை மறந்து விடாதீர்கள் இளைஞர்களே.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில்            தமிழ்த்துகள்

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

பள்ளி, கல்லூரியில்

அன்பும் கருணையும் பணம் என்ற ஒன்றால் கண்ணை மறைக்க சுயநலம் கருதி ஓடிக்கொண்டிருக்கிறோம் இந்த கலி உலகத்தில். ஒருவன் எவ்வளவு தான் கற்று இருந்தாலும் உலகத்தோடு இணைந்து வாழும் முறையை கல்லாமல் இருந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் திருவள்ளுவர். இன்றைக்கும் எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் உதவும் வகையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவைச் சங்கம். பாரத சாரண சாரணியம் என்ற அமைப்புகளைப் பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் ஏற்படுத்தி இளைஞர்களையும் யுவதிகளையும் கருணை உள்ளத்தோடு சமூகப் பணி செய்ய அரசு பயிற்சி கொடுக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேற கருணை கொண்டு முன்னேறுதல் வேண்டும்.              தமிழ்த்துகள்

முடிவுரை

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று என்கிறது உலகப் பொதுமறை. உயிர்க்கொலை செய்யாமல் இருங்கள்; ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கூறும் கருணை அரச பதவியை உதறித் தள்ளிவிட்டுப் போதி மரத்தடியில் அமர்ந்த போது தான் புத்தருக்கு ஞானம் பிறந்தது. நாம் எல்லோரும் போதி மரத்தடிக்கு போய்த்தான் ஞானம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவைக் கொண்டு கருணையும் அன்பையும் அதில் நிறைத்து மனிதனாகப் பிறந்த நாம் புனிதனாவோம்! தமிழ்த்துகள்

வாருங்கள்! கருணையால் முன்னேறுவோம்!

 

தமிழ்த்துகள்

Blog Archive