ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
31-10-2022 முதல் 4-11-2022
2.பருவம்
2
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஓதுவது ஒழியேல் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
இன்பத்தமிழ்க் கல்வி, அழியாச் செல்வம்
6.பக்கஎண்
26-30
7.கற்றல் விளைவுகள்
T-711 படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முயலுதல்.
8.திறன்கள்
எளிய பாடல்களைச் சீர்பிரித்துப் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும் திறன்.
9.நுண்திறன்கள்
பாரதிதாசனின் கவிதையை அறிதல்.
அழியாத செல்வம் குறித்து அறிதல்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-7th-tamil-inbathamizh-kalvi.html
https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_26.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-7th-tamil-aliya-selvam-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த கவிதைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த கல்வி குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பாரதிதாசனின் கவிதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கல்வியின் பெருமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
இன்பத்தமிழ்க் கல்வி பாடலை விளக்குதல். உவமையை உணர்தல். தமிழர்களின் நிலையை உணர்த்துதல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, அழியாச் செல்வம் பாடலைக் கூறுதல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
கவிதைகளை அறியச் செய்தல். கல்வியின் அவசியத்தை அறிதல். தமிழரின் பாடல் குறித்து கல்வியின் சிறப்பைக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – கழனி என்னும் சொல்லின் பொருள் ..............................
வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல் ....................................
MOT – பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
HOT – ஏன் கல்விச் செல்வம் அழியாச் செல்வம் எனப்படுகிறது என எழுதுக.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதன் நன்மைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.