கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 18, 2022

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 தமிழர் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் 8th model notes of lesson tamil unit 5

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-10-2022 முதல் 21-10-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

குழலினிது யாழினிது – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தமிழர் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்.

6.பக்கஎண்

104 - 114

7.கற்றல் விளைவுகள்

T-813. தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல், பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.

8.திறன்கள்

பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுதல்.

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

இசைக் கருவிகளின் வகைகளைப் பற்றி அறிதல்.

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/10/5-8th-tamil-mindmap-unit-5_18.html

https://tamilthugal.blogspot.com/2021/09/ancient-tamil-music-instruments.html

https://tamilthugal.blogspot.com/2021/08/5-thokainilai-thokanilai.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-2.html

https://tamilthugal.blogspot.com/2022/10/5-8th-tamil-mindmap-unit-5_99.html

11.ஆயத்தப்படுத்துதல்

இசைக்கருவிகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

வேற்றுமை குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மாணவர்கள் பார்த்த, வாசித்த இசைக் கருவிகளின் பெயர்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த தொகை, தொடர் வகைகள் பற்றிக் கூறச்செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          இசைக்கருவிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். நான்கு வகை இசைக் கருவிகள் குறித்து விளக்கி மாணவர்களை அவை குறித்து கூறச்செய்தல். அடிக்கடி காணும் இசைக்கருவிகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.


 


 

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களைக் கண்டு உரையாடுதல். தொகை, தொகாநிலைச் சொற்களை அறிந்துகொள்ளுதல்.

15.மதிப்பீடு

          LOT – வளர்தமிழ் என்பது .............................. தொகை.

                   சேகண்டி .................................... எனப்படும்.

          MOT – அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

                   காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

          HOT – நீ அறிந்த இசைக் கருவிகளைப் பட்டியலிடுக.

                    தொகைநிலைத் தொடர்களை எடுத்துக்காட்டுகளுடன் எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

இக்கால இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணங்களை எழுதுதல்.

இசைக்கருவிகள் குறித்த தகவல்களை இணையத்தில் தேடி எழுதுக.

 


தமிழ்த்துகள்

Blog Archive