ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
7-11-2022 முதல் 11-11-2022
2.பருவம்
2
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
பாடறிந்து ஒழுகுதல் - உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழர் பெருவிழா
6.பக்கஎண்
29-32
7.கற்றல் விளைவுகள்
T-602 தாங்கள் பார்த்த, கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள். சடங்குகள் போன்றவற்றைப் பற்றித் தயக்கமின்றி வினா எழுப்பவும், கலந்துரையாடவும் செய்தல்,
8.திறன்கள்
தமிழர் திருநாளின் சிறப்பை உணரும் திறன்
9.நுண்திறன்கள்
தமிழருக்கே உரிய சிறப்பான விழாவைப் பற்றி அறியும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-6th-thamilar-peruvila-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-6th-tamil-mindmap-term-2-unit-2_31.html
https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_14.html
https://tamilthugal.blogspot.com/2020/01/bhogi.html
https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2021/12/pongal-thirunal-tamil-katturai-essay-in.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த விழாக்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழரின் பெருமையைக் கூறுதல்.
தமிழரின் பண்பாட்டைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
போகித் திருநாள், பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்து மாணவர்களின் தகவல்களைக் கேட்டல். ஜல்லிக்கட்டு குறித்துப் பேசுதல்.
கிராமத்துப் பொங்கல், நகரப் பொங்கல் இரண்டையும் ஒப்பிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். தமிழர் விழாக்களை அறியச் செய்தல். பண்பாட்டை உணர்தல்.
15.மதிப்பீடு
LOT – கதிர் முற்றியதும் .............................. செய்வர்.
தமிழர் திருநாள் எனப்படுவது ....................................
MOT – போகிப் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
HOT – உங்கள் ஊரில் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்து எழுதுக.
காணும் பொங்கலின் சிறப்புகள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள் ஊரின் விழாக்கள் குறித்து எழுதுக.
ஏறுதழுவுதல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.