கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 06, 2022

இந்தியா 2047 தமிழ்க் கட்டுரை பேச்சு India 2047 tamil essay speech katturai pechu

 

இந்தியா 2047

முன்னுரை                               தமிழ்த்துகள்

மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்னறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே; இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே; பார்மிசை ஏதொரு நூலிது போலே!        தமிழ்த்துகள்

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே என்றார் மகாகவி பாரதி.

அடிமை விலங்கு அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசித்து 75 ஆண்டுகள் போராடி இழுத்து வருகிறோம் மக்களாட்சித் தேரை. உலக அரங்கில் இந்தியா வல்லரசு ஆகுமோ ஆகாதோ என்ற ஒரு ஏளனப் பார்வை!. எஃகினும் நரம்பு முறுக்கேறிய இளைஞர் கூட்டம் நம்மிடம் இருக்கும் வரை இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று சாதித்துக் காட்டுவோம்! இதோ எழுதுகிறேன் அதற்கான உரை!

யாதும் ஊரே யாவரும் கேளிர்            தமிழ்த்துகள்

வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம்! வேதங்கள் பிறந்த இடம் பாரதம்! ஆற்றுவளம் சோற்று வளம் கொஞ்சமா? இல்லை ஆன்மீகத் தத்துவம் தான் பஞ்சமா? மொழிகள் பல, இனங்கள் பல ஆயினும் இந்து இயேசு புத்த முகமதியர் ஆயினும் ஒன்று, உடன் பிறந்தோர் யாவரும் என்னும் உணர்விலே வளர்ந்து வரும் நாடு இது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என அன்றே கணியன் உலகுக்குச் சொன்னது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானது. இந்த ஒற்றுமை தான் 2047 இந்தியாவின் அடிப்படை வேர். ஆம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

நவீனமயமாகும் வேளாண்மை

இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பவை கிராமங்களே. இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக வேளாண் விளை பொருள்கள் இருக்கின்றன. துண்டு நிலங்களை இணைத்துப் பண்ணை விவசாயம் செய்யும் முறையால் வேளாண் உற்பத்தி பெருகிவிடும். விவசாய நிலங்களிலேயே விற்பனைக்கூடங்கள் அமைந்திருக்கும். அது விவசாயிகளின் வருவாயை உயர்த்திப் பிடிக்கும். மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்கள் அங்கே விற்பனைக்கு இருக்கும்.              தமிழ்த்துகள்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை என்ற வள்ளுவனின் குறள் மெய்யாகும்.

தன்னிறைவுப் பொருளாதாரம்       தமிழ்த்துகள்

இரும்பு, எஃகு, சிமெண்ட் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், மிகை மின் நிறுவனங்கள், இரயில் பெட்டித் தொழிற்சாலை, விமான உதிரி பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, தோல் பொருள்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் ஆலைகள், பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி, உணவு தானியங்கள் பதப்படுத்துதல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் வல்லரசு இந்தியா தன்னிறைவு பெற்று பொருளாதார பலத்தோடு இருக்கும்.         

வற்றும் வளங்களுக்கு மாற்று

உப்பு நீரில் ஒளிரும் எல் இ டி விளக்குகள் இரவைப் பகலாக்கும். மின் சக்தியால் இயங்கும் வாகனங்களால் வாகனப் புகை அறவே இருக்காது. டிரோன்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும். குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு இல்லங்களுக்குக் குழாய்கள் மூலம் தேவையான அளவு வழங்கப்படும். சூரிய ஒளி மின்சக்தித் தகடுகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தன்னிறைவை எட்டும். இயற்கை எரிவாயுப் பயன்பாடு அதிகமாய் இருக்கும். சுற்றுச்சூழல் மாசு இன்றி சுகாதார விழிப்புணர்வுடன் சமுதாயம் வாழும்.

வல்லரசு இந்தியா                        தமிழ்த்துகள்

நிலவுக்குச் சந்திராயனையும், செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்பிய அனுபவம் அங்கே மனிதர்களை அனுப்பி நேரடி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும். அரசு அலுவலகங்கள் எல்லாம் மின்னணு முறையில் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். முப்படைகளும் பாதுகாப்பில் நவீன ஆயுதங்களுடன் தன்னிறைவு பெற்றுத் தலை நிமிர்ந்து விளங்கும். ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர இடம் பிடித்திருக்கும். தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட இந்திய மொழிகளின் ஒப்பற்ற நூல்கள் எல்லாம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அறியும் வண்ணம் மின் நூல்களாக இணையத்தளங்களிலும் புத்தகங்களாகக் கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கும்.

முடிவுரை                     தமிழ்த்துகள்

கல்வி இல்லாப் பெண்டிர் களர் நிலம்- அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவது இல்லை என்ற பாவேந்தனின் வரிகளைப் புரிந்து கொண்ட பாரதியின் புதுமைப் பெண்கள் 2047 இல் பாரதம் முழுவதும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். வருமுன் காக்கும் மருத்துவர்கள், நவீன உலகை வடிவமைக்கும் பொறியாளர்கள், புதுமை படைக்கும் விஞ்ஞானிகள் என இந்தியா உலகிற்கு நுண்ணறிவாளர்களைச் சுமந்து நிற்கும். தானியங்கிகளும் நுண்ணுணர்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்திர மனிதர்களும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதற்கான உள்ளீடுகளை எம் இளைஞர்கள் வடிவமைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆம்! எதிர்காலம் இனி நம் கையில்

இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!

மு.முத்துமுருகன். தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 


தமிழ்த்துகள்

Blog Archive