கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, November 15, 2022

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 3 ஒரு வேண்டுகோள், கீரைப்பாத்தியும் குதிரையும் 7th model notes of lesson tamil unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21-11-2022 முதல் 25-11-2022

2.பருவம்

2

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஒரு வேண்டுகோள், கீரைப்பாத்தியும் குதிரையும்

6.பக்கஎண்

48 - 52

7.கற்றல் விளைவுகள்

T-702 ஒன்றைப் படிக்கும்போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும், அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்,

8.திறன்கள்

கலைகளின் இன்றியமையாமையைக் கவிதை வாயிலாக அறிந்து கொள்ளும் திறன்.

இருபொருள் தரும் வகையில் அமைந்த பாடலின் சொல் நயங்களை உணர்தல்.

9.நுண்திறன்கள்

தேனரசனின் கவிதையை அறிதல்.

இரட்டுறமொழிதல் நயம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

தமிழ்த்துகள்: ஒரு வேண்டுகோள் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் 2 குறுவினா விடை 7TH TAMIL ORU VENDUKOL KURUVINA (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 ஒரு வேண்டுகோள் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 3 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 கீரைப்பாத்தியும் குதிரையும் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 3 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: காளமேகப் புலவர் ஆசிரியர் குறிப்பு - KALAMEKA PULAVAR (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KEERAI PAATHIYUM KUTHIRAIYUM (tamilthugal.blogspot.com)

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கவிதைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த இருபொருள் தரும் சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தேனரசனின் கவிதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

சிலேடை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

                ஒரு வேண்டுகோள் பாடலை விளக்குதல். கலையை உணர்தல். தமிழர்களின் கலையை உணர்த்துதல். இரட்டுறமொழிதல் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, காளமேகப்புலவரின் தனிப்பாடலைக் கூறுதல். சிலேடையின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். கீரையையும் குதிரையையும் ஒப்பிடுதல்.



                மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

                மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். இருபொருள் தரும் சொற்களை உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கவிதைகளை அறியச் செய்தல். தனிப்பாடல்களை அறிதல். கலைகள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

                LOT – மேனி என்னும் சொல்லின் பொருள் ..............................

                                பரி என்பதன் பொருள் ....................................

                MOT – தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

                                காளமேகப்புலவர் பற்றி எழுதுக.

HOT – நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

                                நீங்கள் விரும்பும் படைப்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

ஓவியம் குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.

இரட்டுறமொழிதல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive