ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
21-11-2022 முதல் 25-11-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூடித் தொழில் செய் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு
6.பக்கஎண்
50 - 55
7.கற்றல் விளைவுகள்
T-614 புதிய சொற்களைத்
தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப்
பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.
8.திறன்கள்
தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறியும்
திறன்.
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும்
நாகரிகம், பண்பாட்டினை அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
தமிழரின் வணிக மேன்மையை அறிந்துகொள்ள முயலும்
திறன்.
மீனவர்களின் வாழ்க்கைமுறை குறித்து அறியும்
திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
தமிழ்த்துகள்: கடலோடு விளையாடு, வகுப்பு 6, பருவம் 2, இயல் 3, தமிழ் (tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறப் பாடல்களைக்
கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழரின் பெருமையைக் கூறுதல்.
வாய்மொழி இலக்கியங்களைக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
தமிழன் நாட்டை உருவாக்கிய விதம் குறித்துக் கூறுதல். தமிழன்
அஞ்சாத அஞ்சும் செயல்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
மீனவர்
பாடலை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.
நெய்தல் திணை குறித்து விளக்குதல்.
மீனவர்
துயர் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் வணிகம்
குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல். கடல் வணிகம் பற்றி விளக்குதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். வாய்மொழி இலக்கியங்களை அறியச்
செய்தல். மீனவர் வாழ்வை அறிதல்.
15.மதிப்பீடு
LOT – கலம் என்பதன் பொருள் ..............................
அரிச்சுவடி
எனப்படுவது ....................................
MOT
– நான்கு நிலங்கள் என்பன யாவை?
மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?
HOT
– நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து
எழுதுக.
பழங்கால
மனிதனின் முன்னேற்றங்களைச் சிந்தித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
மீனவர் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
நானிலம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.