பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
முக்கிய ஐந்து மதிப்பெண்கள்வரலாறு
இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர் கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க,
சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி,
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக எழுதவும்.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.
கட்டபொம்மன் வீரதீரப்போர் பற்றி விவரி.
இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெற இட்டுச்சென்ற சூழ்நிலைகள் யாவை?
தமிழ்நாட்டு சமூக மாற்றத்தில் தந்தை பெரியார் பங்கு பற்றி விவரி.
புவியியல்
இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி,
நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் தாக்கங்களை விளக்குக.
இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.
ஏதேனும் இரண்டு இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் பற்றி எழுதுக.
காவிரி ஆறு குறித்துத் தொகுத்து எழுதுக.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கான சூழ்நிலைகளை விவரி.
புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய தேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.
இந்திய தொழிலகங்கள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் யாவை?
குடிமையியல்
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் யாவை?
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற நீதிமன்ற அதிகாரங்களை விவரி.
அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.
பொருளியல்
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் யாவை?
நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.
பசுமைப்புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
பொது விநியோக முறை பற்றி விவரி.