கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 12, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 7th tamil exam answer key virudhunagar district term 3

 

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

தொகுத்தறித் தேர்வு 2023

பருவம் 3

ஏழாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         10X1=10

1.இ.ஒப்புரவு

2.ஈ.தாமிரபரணி

3.ஆ.எளிமை

4.இ.நாடு+என்ப

5.புடவை

6.கருணை

7.உலகம்

8.நெய்

9.குற்றாலம்

10.பாய்ச்சுதல்

 

பகுதி 2

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

11.அங்கவை, சங்கவை

 

12. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்

பச்சையாறு

மணிமுத்தாறு

சிற்றாறு

காரையாறு

சேர்வலாறு

கடனாநதி

 

13. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனி பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும்.

எடுத்துக்காட்டு – கலகல.

 

14. காக்கைக் குஞ்சு என்று எண்ணியிருந்த காக்கைக்கு அன்றைக்கு தான் அது குயில் குஞ்சு என்று தெரிந்தது.

எனவே காக்கை குயில் குஞ்சை போகச் சொன்னது.

 

15. பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

 

16. உவமை வேறு உவமைக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.

இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.

எடுத்துக்காட்டு - தமிழ்த் தேன்

 

17. பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு என வள்ளுவர் கூறுகிறார்.

 

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X4=12

 

18. சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கு உரியது.

அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.

அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்கிறது இயேசு காவியம்.

 

 

19. இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

சிலர் பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர் வேறு சிலர்.

ஆனால் அந்த தலைவர் பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ் மொழி தான் என்று காயிதே மில்லத் உறுதியாகச் சொன்னார்.

இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள் தான் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள்.

அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப் பழமையான மொழி.

எனவே தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்.

 

20. இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது.

அடுக்குத்தொடர் பிரித்தால் பொருள் தரும்.

இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரு முறை மட்டுமே வரும்.

அடுக்குத்தொடரில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்.

இரட்டைக்கிளவியில் சொற்கள் இணைந்து நிற்கும்.

அடுக்குத்தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.

இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளில் வரும்.

அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் காரணமாக வரும்.

 

21. மனிதர்களே விதைக்கவும் களை எடுக்கவும் அறுவடை செய்யவும் பயன்படுத்தப்பட்டனர் அன்று.

உழவு மாடுகள் செய்த வேலையை இன்று எந்திரங்கள் செய்கின்றன.

கமலை பூட்டி நீர் இறைத்தல்,  ஏற்றம் மூலம் இறைத்தல் என்ற நிலை மாறி மின்விசை மூலம் நீர் இறைக்கும் எந்திரங்கள் அப்பணியைச் செய்கின்றன.

மிகப்பெரிய அணைக்கட்டுகள் கட்டி அதில் வாய்க்கால்கள் அமைத்து பாசன முறை மேற்கொள்ளப்படுகிறது இன்று.

 

 

22. உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

 

 

 

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

23.அ.செல்வம்

ஆ.கவிஞர்

 

24.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

25.அ. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

ஆ. மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

 

26.அ. செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.

ஆ. பட்டு, கோட்டை, கோடை, கோடு, படு, படை, பட்டை.

 

 

27.அ.உள்ளங்கை நெல்லிக்கனி போல

 

ஆ.குன்றின் மேலிட்ட விளக்கு போல

 

28.அ.எத்தனை

ஆ.என்ன

 

29. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 4

அடிபிறழாமல் எழுது

 

30. புதுமை விளக்கு                                                                    4

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச்- செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று.

-        பொய்கையாழ்வார்

 

 

31. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்                                             2

சேராது இயல்வது நாடு.

 

 

பகுதி 5

ஏதேனும் 1                                 1X6=6

32, 33

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 6

ஏதேனும் 1                                 1X6=6

34, 35

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

Blog Archive