6th tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
இன்னுயிர்
காப்போம் – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
முடிவில் ஒரு
தொடக்கம்
6.பக்கஎண்
50 - 52
7.கற்றல் விளைவுகள்
T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள்,
கட்டுரைகளின் நயம் பாராட்டல்.
8.கற்றல் நோக்கங்கள்
உறுப்பு தானத்தின்
முக்கியத்துவத்தை அறிதல்.
9.நுண்திறன்கள்
உறுப்புக்கொடையின்
உண்மை நிகழ்வு குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_74.html
https://tamilthugal.blogspot.com/2020/07/6th-tamil-kattur.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_89.html
https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-sixth-tamil-term-3-unit-3-mudivil.html
11.ஆயத்தப்படுத்துதல்
உறுப்பு தானம்
குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கண்ணப்பன் கதை
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
முடிவில் ஒரு
தொடக்கம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஹிதேந்திரன், அவனின்
பெற்றோர் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். இதய
மாற்றம் பற்றிக் கூறி கண்தானம் குருதி தானம் செய்ய உறுதி எடுத்தல்.
மனிதநேயம் வெளிப்பட்ட
மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். கொடை பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக்
கூறுதல். முதலுதவி பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை
வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல். இயன்றவரை கொடை கொடுத்தல்.
15.மதிப்பீடு
LOT – ஹிதேந்திரனின் பெற்றோர்
பெயர் ..............................
MOT
– முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
HOT – உறுப்பு தானம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.
உறுப்பு தானம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.