9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
16-04-2024 முதல் 21-04-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-4
4.பாடத்தலைப்பு
முதல் 4 இயல்கள்
5.உட்பாடத்தலைப்பு
திருப்புதல்
6.பக்கஎண்
4 இயல்கள்
7.கற்றல் விளைவுகள்
பொருத்தமுடைய அனைத்தும்
8.கற்றல் நோக்கங்கள்
இயல் 1 முதல் இயல் 4 முடிய
9.நுண்திறன்கள்
காலாண்டுத் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
மாதிரி வினாத்தாள்கள்
11.ஆயத்தப்படுத்துதல்
சிறு தேர்வுகள் மூலம் காலாண்டுத்தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.
12.அறிமுகம்
காலாண்டுத் தேர்வு எழுதும் முறையைக் கூறுத்ல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும் முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டுதல்.
15.மதிப்பீடு
LOT – வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.
MOT – வல்லினம் மிகும் இடங்கள் 2 எழுதுக.
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
அ. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
ஆ. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
HOT – நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
தேர்வுப் பகுதிகளைப் புரிந்து கற்றல்.