கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 18, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2025. புதன் கிழமை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-06-2025. புதன் கிழமை 

திருக்குறள் :

குறள்

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம்: கடவுள் வாழ்த்து ; 

குறள் எண் : 007

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம் :

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

பழமொழி :

செய்வன திருந்தச் செய்

Do well what you have to do.

இரண்டொழுக்க பண்புகள்:

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்களின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் உங்களின் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். அப்துல் கலாம்.

பொது அறிவு :

01.இந்தியாவில் தேசிய வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

டேராடூன் (Dehradun)

02. உலக வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது?

வாஷிங்டன் (Washington)

English words & Tips :

+insolent

திமிரான

innate

உடன் பிறந்த

Grammar Tips:

* The most simple way to find that a given word is a noun is if it follows an article like "the" or "a." Examples: The Apple is red in colour.

* Nouns can also follow possessives or numbers. Examples: There are four pillows on my bed.

அறிவியல் களஞ்சியம் :

பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை 'இரட்டைக்கோள்கள்' என்று அழைக்கிறோம். வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. செய்துள்ளனர்.. பூமியைப் போலவே அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்களும் உறுதி

ஜூன் 18 மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்

பிறப்பு 28 மார்ச் 1868 - இறப்பு 18 சூன் 1936.

உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.

இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் 'ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்' வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் 'தி லோயர் டெப்த்ஸ்' என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற 'மதர்' (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன.

இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையேபயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில்

ஜூன் 18

கக்கன் அவர்களின் பிறந்தநாள்

பி. கக்கன் (P.Kakkan) பிறப்பு 18 சூன் 1908 இறப்பு 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.

நீதிக்கதை

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன. இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.

சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.

இன்றைய செய்திகள்

18.06.2025

* தமிழ்நாட்டில் புதிதாக 3,103 வழித்தடங்களில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அரபு நாடுகளில் பணியாற்றி வரும் 92 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* சென்னையிலிருந்து, திருநெல்வேலிக்கு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் தெற்கு இரயில்வே அறிவிப்பு.

* நீட் மறுக் கூட்டல் அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு.

*விளையாட்டுச் செய்திகள்

*பாரிஸ் டயமண்ட் லீக்கிற்கு நீரஜ் சோப்ரா உறுதி செய்யப்பட்டார். இந்தியாவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பாரிஸ் டயமண்ட் லீக் தொடக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

*U-23 & சீனியர் பெண்கள் கால்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Today's Headlines 18.06.2025

The minibus scheme has been introduced on 3,103 new routes in Tamil Nadu.

Additional trains will be run from Chennai to Tirunelveli to avoid passenger congestion Southern Railway announcement

NEET re-valuation announcement date postponed

The Israel-Iran conflict has disrupted crude oil production, putting 9.2 million Indians working in Arab countries at risk of losing their jobs.

SPORTS NEWS

Neeraj Chopra confirmed for Paris Diamond League. India's Olympic javelin champion Neeraj Chopra has been included in the starting list for the Paris Diamond League.

U-23 & In front Women's Football Teams Announced

தமிழ்த்துகள்

Blog Archive