கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, June 01, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆழிக்கு இணை ஜூன் 8

8th tamil model notes of lesson

lesson plan 2026 june 8


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ் இன்பம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஆழிக்கு இணை

6.பக்கஎண்

5 - 7

7.கற்றல் விளைவுகள்

T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

8.கற்றல் நோக்கங்கள்

இரட்டுறமொழிதலின் சுவையறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாடுதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/06/1.html 

https://tamilthugal.blogspot.com/2024/06/1_37.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_82.html 

11.ஆயத்தப்படுத்துதல்

இருபொருள் தரும் சொற்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.       

12.அறிமுகம்

சிலேடை நயத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழுக்கும் கடலுக்கும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குதல். காளமேகப்புலவர் குறித்தும் தமிழழகனார் குறித்தும் கூறுதல்.

இரட்டுறமொழிதல் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஆழி என்பதன் பொருள் ..........................

          ந.சி.வி – இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?

உ.சி.வி      தமிழுக்கும்  கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.

17.தொடர்பணி

நீங்கள் படித்தவற்றுள் இடம்பெற்ற இரட்டுறமொழிதலை எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive