கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 12, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வாழ்விக்கும் கல்வி அக்டோபர் 21

7th tamil model notes of lesson

lesson plan October 21

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21-10-2026 முதல் 23-10-2026

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

வாழ்விக்கும் கல்வி

6.பக்கஎண்

7.கற்றல் விளைவுகள்

T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும்  செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

கல்வியின் இன்றியமையாமையை அறிதல்.

கல்வி சார்ந்த பாடல்கள், பழமொழிகள் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_26.html   https://tamilthugal.blogspot.com/2021/06/7-2-2-7th-vazhvikkum-kalvi-kuruvina.html 

https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_31.html 

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த கல்வி குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் முக்கியத்துவத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் பெருமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          காலமறிதல், அழியாச்செல்வம், ஒளிவிளக்கு, கற்றவரும் கல்லாதவரும், கல்வியும் பள்ளியும், கற்க கசடற குறித்து விளக்குதல். கல்வியை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்தல்.

கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். கல்வி குறித்த மாணவர்கள் அனுபவங்களைக் குழுவாகக் கூறச்செய்தல்.




மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வியின் அவசியத்தை அறிதல். கல்வியின் சிறப்பைக் கூறுதல். எப்படிக் கற்க வேண்டும் என்பதை உணர்த்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கல்வியில்லாத நாடு .............................. வீடு.

                   பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் ....................................

          ந.சி.வி – நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

                   கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.

உ.சி.வி – நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வி தொடர்பான பாடல் வரிகளை எழுதுக.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive