கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 26, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு For Government School Students


 

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 10

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  •  'அடிகள் நீரே அருளுக' - யார் யாரிடம் கூறியது?
  •  ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
  •  மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
  •  வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.    
  •  குற்றம் – எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.
  • மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
  • எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?
  • ஆற்றுநீர்ப் பொருள்கோளை விளக்குக,
  • பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
  •       தாள்வினை இன்மை பழி. – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
  •  தீவக அணியை விளக்குக.
  • சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
  •  மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
  • ம.பொ.சி. குறித்து நீ அறிந்த தகவல்களை விரிவாக விளக்குக.
  • கோபல்லபுரத்து மக்கள் போன்று விருந்து போற்றும் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
  • பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை / நூலுக்கான மதிப்புரை எழுதுக.      குறிப்பு-நூலின் தலைப்பு-நூலின் மையப்பொருள்- மொழி நடை வெளிப்படுத்தும் கருத்து நூலின் நயம் நூல் கட்டமைப்பு- சிறப்புக்கூறு -நூல் ஆசிரியர்.


9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 9

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
* கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
* பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
* நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
* தித்திக்கும் எனத் தொடங்கும் தமிழ் விடு தூது மனப்பாடப் பாடலை எழுதுக.
* பகுத்தறிவு என்றால் என்ன?
 நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
* தரும் என முடியும் திருக்குறளை எழுதுக.
* பாலை நிலத்தில் பருந்துகள் வந்ததன் காரணம் என்ன?
* எனது பயணம் என்ற தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
* இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
* கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.
* மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
* கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
* பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
* நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
* தித்திக்கும் எனத் தொடங்கும் தமிழ் விடு தூது மனப்பாடப் பாடலை எழுதுக.
* பகுத்தறிவு என்றால் என்ன?
 நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
* தரும் என முடியும் திருக்குறளை எழுதுக.
* பாலை நிலத்தில் பருந்துகள் வந்ததன் காரணம் என்ன?
* எனது பயணம் என்ற தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
* இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
* கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 8

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
* ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
* பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
* நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
* அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.
* அந்தாதி என்றால் என்ன?
* இரட்டுற மொழிதலணி எவ்வாறு பொருள் தரும்?
* ஓடையாட எனத் தொடங்கும் ஓடை மனப்பாடப்பாடலை எழுதுக.
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
*  எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
* தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
* தன் குற்றம் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
 * அழகிய மரம் - எச்ச வகையை எழுதுக.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
 * அறிந்து என முடியும் திருக்குறளை எழுதுக.
* இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
* கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கி எழுதுக.
* வல்லினம் மிகாத் தொடர்களை எழுதுக.
* அந்தாதி என்றால் என்ன?
* தளை என்பது யாது? 
* இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள்தரும்?
* உழைப்பே உயர்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 7

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* டிகேசி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
* உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
* என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* வையம் எனத் தொடங்கும் புதுமை விளக்கு மனப்பாடப் பாடலை எழுதுக.
* உருவக அணியை விளக்குக.
* பிறப்பொக்கும் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
* சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?
* ஆட்சிமொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
* ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
* ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
*  பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?
* டிகேசி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
* பொய்கை ஆழ்வார் குறிப்பு வரைக.
* ஏகதேச உருவக அணிக்கும் உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
* பிறப்பொக்கும் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
*  வாழ்க்கை மலர்ச்சோலை ஆக மாற என்ன செய்ய வேண்டும்?
* விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
* இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
* என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மே 2022 மாதிரி வினாத்தாள் 2 pdf 9th TAMIL MODEL QUESTION PAPER 2 - 100 MARKS

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 6

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
* வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.
* சொற்களின் வகைகளை எழுதுக.
* தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
* எல்லாரும் எனத்தொடங்கும் பராபரக்கண்ணி மனப்பாடப் பாடலை எழுதுக.
* பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
* அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
* அறம் செய விரும்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
* ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
* பகுத்துண்டு எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
* வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
* தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக. 
* காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
* வேலுநாச்சியார் ஹைதர் அலியின் உதவியை எவ்வாறு பெற்றார்?
* நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை எவை? எடுத்துக்காட்டு தருக.
* இன்பநிலை எப்போது வந்து சேரும்?
* மணிபல்லவத் தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
* பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது?
* பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்?
* தலை என முடியும் திருக்குறளை எழுதுக.
* ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?
* வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மே 2022 மாதிரி வினாத்தாள் 2 - 100 மதிப்பெண்கள் pdf 9th TAMIL MODEL QUESTION PAPER 2 - 100 MARKS

 9th MODEL QUESTION PAPER 2 REDUCED SYLLABUS 100 MARKS VIRUDHUVIRUDHUNAGAR DISTRIDISTRICT 👇 


பதிவிறக்கு/DOWNLOAD


விருதுநகர் மாவட்டம் 9ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி 100 மதிப்பெண்கள் மாதிரி வினாத்தாள் 2 மே 2022👆

பத்தாம் வகுப்பு தமிழ் - பெற்றோர் ஆசிரியர் கழக 6 வினாத்தாள்களில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf 10th tamil pta questions one word reduced syllabus

Monday, April 25, 2022

ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 3 மாதிரி வினாத்தாள் pdf 6th science third term model exam question paper pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 3 மாதிரி வினாத்தாள் 

விருதுநகர் மாவட்டம் pdf

Sixth science third term model exam question paper pdf Virudhunagar District 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 2, 100 மதிப்பெண்கள் 8th tamil model question paper 2 annual

எட்டாம் வகுப்பு தமிழ் ஆண்டு இறுதித்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 -100 மதிப்பெண்கள் pdf 8th tamil model question paper 2022

  பதிவிறக்கு/DOWNLOAD


virudhunagar district annual model question paper 2 eighth tamil 

விருதுநகர் மாவட்ட ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

Friday, April 22, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் 50 கூடுதல் குறுவினா விடைகள் REDUCED SYLLABUS 10TH TAMIL 50 Inside SHORT Q&A

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf10th tamil slow learners guide tenth material

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10th tamil public model exam question paper sslc

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10th tamil model exam question paper sslc

Thursday, April 21, 2022

எட்டாம் வகுப்பு வினாடிவினா உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் HITECH LAB ONLINE QUIZ 8th STANDARD

 

எட்டாம் வகுப்பு வினாடிவினா 

உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் 

HITECH LAB ONLINE QUIZ 8th STANDARD

1.

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

A. உலா

B. பரணி

C. கலம்பகம்

D. பதிகம்

2.

மறலி' என்ற சொல்லின் பொருள் யாது?

A. காலன்

B. யானை

C. புதர்

D. கரி

3.

சோழர் படையின் தாக்குதலைக் கண்டவர்கள் யார்?

A. பாண்டியர்

B. சேரர்

C. கலிங்கர்

D. மௌரியர்

4.

கலிங்கத்துப்பரணி' இந்நூலுக்குத் தொடர்பில்லாத தொடர் எது?

A. தமிழில் முதலில் எழுந்த பரணி நூல்

B. முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் வெற்றியைக் குறித்துப் பாடப்பட்ட நூல்

C. தென்தமிழ் தெய்வப்பரணி என ஓட்டக்கூத்தரால் புகழப்பட்ட நூல்

D. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை

5.

தமிழர்கள் எவற்றைத் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்?

A. பகையையும் தீங்கையும்

B. வணிகத்தையும் போரையும்

C. நட்பையும் வெறுப்பையும்

D. அறத்தையும் வீரத்தையும்

6.

வெங்கரி' என்னும் சொல்லைப் பிரித்து எழுத எவ்வாறு அமையும்?

A. வெம்+கரி

B. வெம்மை+கரி

C. வெண்+கரி

D. வெங்+கரி

7.

He behaved aggressively. Pick out the antonym for the underlined word.

A. vigorous

B. politely

C. playful

D. rude

8.

What made Rani got frightened?

A. exams

B. studies

C. online threatening

D. neighbours

9.

Filling the blanks with correct answer Our information can be ___ by the strangers.

A. used

B. misused

C. taken

D. delete

10.

What is the American spelling for the word ' defence'

A. defence

B. defenze

C. defence

D. defense

11.

Who asks his mother about the functioning of screwguage?

A. Mike

B. Gladin

C. Thomas

D. David

12.

What is the name of Gladin sister?

A. Manini

B. Rathi

C. Meena

D. Rani

13.

ஒரு முக்கோணத்தின் மூன்W _______ கோடுகளும் ஒரு புள்ளி வழிச் செல்லும் கோடுகள் ஆகும்

A. இணை

B. நடு

C. தொடு

D. உச்சி

14.

சுற்று வ ட் ட மையமானது முக்கோணத்தின் உச்சிகளிலிருந்து________ அமைந்துள்ளது.

A. தொலைவில்

B. அருகில்

C. சமதூரத்தில்

D. ஒன்றாக

15.

செங்குத்துக்கோடானது முக்கோணத்தின் அடிப்பக்கத்தின் மீது _____ உருவாக்குகிறது.

A. குறுங்கோணம்

B. விரிகோணம்

C. செங்கோணம்

D. நேர்கோணம்

16.

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்ஙங்களின் மையக்குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதன்______ எனப்படும்

A. நடுமையம்

B. சுற்றுவட்டமையம்

C. வெளிமையம்

D. உள்வட்டமையம்

17.

கோண இரு சமவெட்டி என்பது ஒரு கோணத்தை இரண்டு _______ கோணங்களாக பிரிக்கும் கோடு அல்லது கதிர் ஆகும்.

A. சம அளவுள்ள

B. சம அளவற்ற

C. பக்கங்களாக

D. இணையாக

18.

செங்கோடுகள் சந்திக்கும் புள்ளி______ எனப்படும்

A. மையம்

B. செங்கோட்டுமையம்

C. நடுகோட்டுமையம்

D. தொடுகோடுகள்

19.

இரும்பில் இருந்து பெறப்பட்ட காந்தத்துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப்படலம் -------------------------

A. மாக்ஸ்ட்ரைப்

B. அலுமினியம்ஸ்ட்ரைப்

C. நிக்கல்ஸ்ட்ரைப்

D. கோல்ட்ஸ்ட்ரைப்

20.

அதிகமான காந்தத் தன்மையை பெற்ற தாது எது?

A. மேக்னடைட்

B. சீடரைட்

C. ஹேமடைட்

D. கூலும்பைட்

21.

பின்வருவனவற்றுள் எது இயற்கை காந்தம் அல்ல?

A. மேக்னடைட்

B. சீடரைட்

C. ஹேமடைட்

D. நியோடிமியம்

22.

காந்தப் புலத்தில் வெளிப்படுத்தும் பண்புகளைக் கொண்டு காந்தப் பொருட்களை ----------------- வகைகளாாகப் பிரிக்கலாம்.

A. 1

B. 2

C. 3

D. 4

23.

ஒரு காந்தம் எப்பொழுது காந்தத் தன்மையை இழக்கிறது?

A. மிக உயரமான இடத்திலிருந்து கீழே விழும் பொழுது

B. அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும்போது

C. காந்தத்தை தொடர்ந்து அடிக்கும் பொழுது

D. இவை அனைத்தும்

24.

காந்தத்தின் வலிமை அதன் முனைகளில்

A. அதிகம்

B. குறைவு

C. சமம்

D. மிகக் குறைவு

25.

பொருந்தாத நகரத்தை தேர்ந்தெடுத்து எழுதவும்.

A. டெல்லி

B. ஹைதராபாத்

C. லக்னோ

D. மதுரை

26.

கூற்று: இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது. காரணம்: இறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயின.

A. கூற்று, காரணம் சரி

B. கூற்று, காரணம் தவறு

C. கூற்று சரி, காரணம் தவறு

D. கூற்று தவறு, காரணம் சரி

27.

இந்தியாவில் இருப்புப்பாதை _____ ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

A. 1853

B. 1854

C. 1855

D. 1856

28.

இந்தியாவில் புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்கள் எவை?

A. டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் (ம) லக்னோ

B. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா

C. கொல்கத்தா, டெல்லி, கான்பூர், ஆக்ரா

D. சென்னை, மும்பை, கொல்கத்தா, டாக்கா

29.

பண்டைய நகரங்கள் என்பன_________?

A. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

B. டெல்லி மற்றும் ஹைதராபாத்

C. பம்பாய் மற்றும் கல்கத்தா

D. சென்னை மற்றும் கல்கத்தா

30.

கூற்று 1: 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிராக இருந்தது. கூற்று 2: ஆங்கிலேயர்கள் இந்தியப் பொருளாதாரத்தை காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றியதன் மூலம் நகரங்கள் வளர்ச்சியுற்றன.

A. கூற்று 1 சரி

B. கூற்று 2 சரி

C. கூற்று1, கூற்று 2 சரி

D. கூற்று 1, கூற்று 2 தவறு

 

தமிழ்த்துகள்

Blog Archive