கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 19, 2022

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil ஏப்ரல் 25

வகுப்பு 9
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
*  பகுத்தறிவு என்றால் என்ன?
* உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
* செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பொருத்தும் செயலியைப் பற்றி திரு சிவன் கூறுவது யாது?
* பாலைநிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
* கனவிலும் நினைக்காதது எவர் நட்பு?
* தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
* நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
* நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது?
* நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
* என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
* மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
* சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
* இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
* இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
* தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

தமிழ்த்துகள்

Blog Archive