வகுப்பு 10
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
- 'அடிகள்
நீரே அருளுக' - யார் யாரிடம் கூறியது?
- ஜெயகாந்தன்
பெற்ற விருதுகள் யாவை?
- மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது?
- வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
- குற்றம் – எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.
- மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
- எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?
- ஆற்றுநீர்ப் பொருள்கோளை விளக்குக,
- பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
- தாள்வினை இன்மை பழி. – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
- தீவக அணியை விளக்குக.
- சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
- மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
- ம.பொ.சி. குறித்து நீ அறிந்த தகவல்களை விரிவாக விளக்குக.
- கோபல்லபுரத்து மக்கள் போன்று விருந்து போற்றும் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
- பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை / நூலுக்கான மதிப்புரை எழுதுக. குறிப்பு-நூலின் தலைப்பு-நூலின் மையப்பொருள்- மொழி நடை வெளிப்படுத்தும் கருத்து நூலின் நயம் நூல் கட்டமைப்பு- சிறப்புக்கூறு -நூல் ஆசிரியர்.