கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 01, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 முதலெழுத்தும் சார்பெழுத்தும், திருக்குறள் 6th model notes of lesson tamil term 1 unit 2

 17 படிநிலைகளுடன் புதிய பாடக்குறிப்பு

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-08-2022 முதல் 12-08-2022

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

இயற்கை இன்பம் - கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

முதலெழுத்தும் சார்பெழுத்தும், திருக்குறள்

6.பக்கஎண்

43-50

7.கற்றல் விளைவுகள்

614 – புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல்

8.திறன்கள்

இலக்கணம் அறியும் திறன்

திருக்குறள் அறியும் திறன்

9.நுண்திறன்கள்

முதலெழுத்து, சார்பெழுத்து, உயிர்மெய், ஆய்தம் குறித்து உணரும் திறன்.

திருக்குறளின் அறக்கருத்துகளை உணரும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_30.html

https://tamilthugal.blogspot.com/2020/05/6-1-2.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-2-q-6th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/08/6-2-6th-tamil-worksheet-with-pdf_15.html

https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-1-6th-tamil-thirukural-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

தமிழிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

உயிர், மெய், ஆய்த எழுத்துகள் குறித்துக் கூறி, முதலெழுத்துகள் சார்பெழுத்துகளை அறிமுகப்படுத்துதல்.

திருவள்ளுவர் குறித்த குறிப்புகளைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் முதலெழுத்துகள், சார்பெழுத்துகள், அவற்றின் வகைகள் 10, அதில் உயிர்மெய், ஆய்தம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          திருக்குறள்களை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சார்பெழுத்துகள் பத்தையும் வரிசையாக அறியச் செய்தல். ஆய்த எழுத்து குறித்து விளக்குதல். திருக்குறளை வாழ்வியலோடு பொருத்தி உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது ..............................

                   திருக்குறளை இயற்றியவர் ....................................

          MOT – உயிருள்ள உடல் எது?

                   சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

          HOT – முதலெழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.

                   மழை இல்லையேல் இப்புவிக்கு ஏற்படும் துன்பங்களைப் பட்டியலிடு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

ஆய்த எழுத்து இடம்பெறும் சொற்களைத் திரட்டுக.

திருவள்ளுவர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive