கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 07, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2025. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

07-07-2025. திங்கள்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : விருந்தோம்பல் ; 

குறள் எண் : 086.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

விளக்கம் :

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

பழமொழி :

அதிகமாகப் படிக்கிற போது, உலகம் பெரியதாகத் தெரிகிறது.

The more you read, the wider you see.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட.. வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்.

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

ஒரு துளி பேனா மை பல லட்சம் பேரை சிந்திக்க வைக்கும் பைரன்

பொது அறிவு :

01.இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது?

கட்ச் மாவட்டம்-குஜராத் 

Kutch District - Gujarat

02. இந்தியாவில் மிக உயரமான அணை எது?

தெஹ்ரி அணை உத்தரகண்ட் 

Tehri Dam, Uttarakhand

English words:

+ awefully good - very good or extremely good.

+ aweful என்பது எதிர்மறை வார்த்தை ஆனால் good என்பதோடு சேரும்

போது மிகவும் நன்று ஆகிறது.

It is an oxymoron word. Two different meaning words combined together to form a word of 'greatness'

Grammar Tips:

→ They are Twin brethren

In this sentence we should use They are twin brothers

Hint

Brother meant real life brothers from the same parent

Brethren meant people from the same group religion and so Similarly

⇒ Cloth meant pieces or types of fabric/ materials Clothes meant things we wear

Find out the meaning of Dies and Dice Indexes and Indices

அறிவியல் களஞ்சியம் :

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.

ஜூலை 07 - மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாள்

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார்.

இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.

நீதிக்கதை

நாவடக்கம் இல்லாத அரசன்

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு. இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார். புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

"அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்."

"உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!"
"ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?"

"பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே... சிறியதாகத்தானே இருக்கிறது.

"மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!"

"ஓ, அப்படியா செய்தி!"

"நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!"

"இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!"

"அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.

"நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்... யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு."

"இல்லை, நானே சென்றுவிடுகிறேன்."

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான். மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

"என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!" எனத் தூதுவனை அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, ""மன்னன் கணைக்கால் இரும்பொறையின் தூதுவன் நான்," என்றான்.

"கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்... இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?"

"மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை."

"தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்."

"எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது."

"உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு."

"உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.

"அடே தூதுவனே... இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!"

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

"தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்," என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

"மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்." தளபதி வீரமுழுக்கமிட்டான்.

"அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!"

"சரி மன்னா, அப்படியே செய்கிறேன்."

"தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, "யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!' என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்."

"உத்தரவு மன்னா!"

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர். நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

இன்றைய செய்திகள் 07.07.2025

* பொறியியல் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்.

* அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஆண்டுக்கு 2.895 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி பாதிக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

* உலகில் உள்ள பலவீனமான மக்களுக்கு சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அமெரிக்கா வழங்கி வந்த USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிதியுதவி நிறுத்தப்பட்டதின் காரணமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து.

Today's Headlines - 07.07.2025

* Engineering Counselling Begins.

Counselling for state engineering admissions has officially started today.

* Impact of U.S. Tax Policy

Due to new U.S. tax regulations, Indian exports worth $2.895 billion per year may be affected, says the World Trade Organization.

* USAID Funding stopped - Global Health Risk

The halting of USAID (U.S. Agency for International Development) funding may lead to over 140 million deaths globally by 2030, due to the impact on health and social development for vulnerable people.

Sports News

International Rapid Chess:

India's Gukesh won the Champion title, bringing glory to the nation.

Shubman Gill Creates History

Following his record-breaking achievement, Virat Kohli congratulates Shubman Gill.

தமிழ்த்துகள்

Blog Archive