9th Tamil First Mid Term Exam Answer Key July 2025 Virudhunagar District
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
முதல் இடைத் தேர்வு சூலை 2025
விடைக்
குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. ஈ. ஓடி வா ஓடி வா
3. ஈ. புலரி
4. இ. வளர்க
5. இ. பக்கம்
6. ஆ. 3
7. அ. 12
8. இ. மலையாளம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அளபெடை இரண்டு வகைப்படும். அவை
①உயிரளபெடை, ②ஒற்றளபெடை 2
10. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது.
எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். 2
11. ஆறு, ஏரி, கிணறு, கண்மாய். 2
12. தமிழ், மலையாளம், கன்னடம், துளு. 2
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
13.
அ. நீர் மேலாண்மை. 1
ஆ. உயிரொலிகள். 1
14. அ நானும்
என்தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம். 1
ஆ. அம்மாவைப்
பணிந்து அவர் பணித்த வேலையைச் செய்வேன். 1
15. அ. செந்தமிழும் நாப்பழக்கம் 1
ஆ. இடமெல்லாம் சிறப்பு 1
16. அ. திருத்தவும். 1
ஆ. பேசப்படுகின்றன. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
17. 🌟அமிழ்தினும் மேலான முக்தி ஆகிய விடுதலை தரும் கனி.
🌟இயல் இசை நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் மொழி.
🌟அறிவால் உண்ணப்படும் தேன்.
🌟மூவகைப் பாவினங்களும் கொண்டுள்ள மொழி. 3
18. 💥அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில்
எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
💥அதனால் அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில்
உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.
💥'இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி
மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்' என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். 3
19. 💥தண்ணீரைப்
பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.
💥நம் முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற
வேண்டும்.
💥நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம்
உருவாக்குதல் வேண்டும். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. செய்தனர்-செய்+த்+அன்+அர்
செய் -பகுதி
த் -சந்தி
அன் -சாரியை
அர் -பலர்பால் வினைமுற்று
விகுதி. 3
21. 🌟திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்
திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
🌟நடுத் திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்கு 'சுந்தரத் தெலுங்கு' எனப்படுகிறது.
🌟மலையாளத்தில் பல்வேறு இலக்கியங்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில்
எழுதப்பட்டன.
🌟கன்னட எழுத்தாளர்கள் ஏழுபேர் ஞானபீட பரிசு பெற்றுள்ளார்கள். 3
22. கட்டாய வினா.
அ. தித்திக்கும் தெள்அமுதாய்த்
தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே -
புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில் 3
அல்லது
ஆ. காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம்
கடல் அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா
நலமெல்லாம்.
விடை அளிக்க 2x5=10
23. அ
திரண்ட கருத்து:
விரிந்து கிடக்கும் பெரிய வானத்திலும் கடல் பரப்பிலும் விண்ணுயர ஓங்கி
நிற்கும் பெருமலையிலும் பள்ளத்தாக்குகளிலும் பொழிகின்ற அருவிகளிலும் காட்டிலும் புல்வெளிகளிலும்
நல்ல வயல்களிலும் விலங்கிலும் பறவையினங்களிலும் மற்றும் தெரிகின்ற பொருள்களிளெல்லாம்
திகழ்ந்து நெஞ்சில் தெவிட்டாமல் இருக்கின்ற பாட்டே தூய்மையின் ஊற்றே! அழகு என்னும்
பெருமைமிக்க ஒழுங்கே மக்கள் உள்ளத்திலும் நீ குடியிருக்க நான் வேண்டுவனே!.
பொருள் நயம்
இசை என்பது நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய உயிருள்ள உயிரற்ற இயற்கையின்
மடியில் தவழ்கின்ற அனைத்திலும் உள்ளதை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார்.
சொல் நயம்
விரிகின்ற நெடு வான் விண்ணோங்கு பெருமழை நல் வயல்
என்று தாம் கூறுகின்ற பொருட்கள் அனைத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார்
கவிஞர்.
சந்த நயம்
பண் அமைத்துப் பாடுவதற்கு ஏற்ற படி கவிஞர் சந்த நயம் மிக்கதாக இப்பாடலை
இயற்றியுள்ளார்.
தொடைநயம்
தொடையற்ற பாடல் நடையற்றுப் போகும்
மோனை, எதுகை, இயைபு இவற்றால் தொடுக்கப்படுவது தொடை.
மோனை நயம்
குயவனின் கைவண்ணம் பானையிலே
புலவனின் கைவண்ணம் மோனையிலே..
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
விரிகின்ற - விண்ணுக்கு பொழிகின்ற - புல்வெளியில்
தெரிகின்ற - தெவிட்டாத அழகு - அகத்திலும்.
எதுகை நயம்
எது கை கொடுக்காவிட்டாலும் எதுகை கைகொடுக்கும்.
இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
புல்வெளியில் - நல்வயலில்
தெரிகின்ற - பொருளிளெல்லாம்
இயைபு நயம்
பாடலின் ஒவ்வொரு அடியிலும் இறுதி எழுத்தோ சொல்லோ ஒன்றி வரத் தொடுப்பது
இயைபு நயம் ஆகும்.
கடற்பரப்பில் – பள்ளத்தாக்கில் - காட்டில் – புள்ளில் - நெஞ்சில்
அணிநயம்
இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
அல்லது
ஆ. உன்னிலும் பத்து மடங்கு எடையை
ஊக்கமாய்ச் சுமக்க முடியும் உன்னால்
மண்ணில் வாழும் மனித இனம் கற்கட்டும்
மகத்தான உழைப்பின் வலிமையை
உருவம் தன்னில் இல்லை வெற்றி
ஊக்கமாய் உழைப்பதில் உள்ளது வெற்றி!
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
24. அ. மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல்
வெற்றியின் நாயகரே வருக!
சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீ அதனை
நித்தநித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! என்கிறார் கவிமணி.
கல்வி மாவட்டம் எங்கும் சூறாவளியாய்ச் சுழன்று பள்ளிகளில் தூய்மை பேணுவதின்
அவசியம் உணர்த்திய பண்பாளரே! இப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எம் பள்ளிக்கு
விருது வழங்க வரும் வெற்றியின் நாயகரே வருக!
விழிப்புணர்வின் சிகரமே!
எரிகின்ற விளக்கின் தூண்டுகோலாக இருந்து மற்றவர் புருவம் உயர இவ்வெற்றியை
எமக்குக் கிடைக்கச் செய்த இமயமே! அன்பின் சிகரமே! சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியாகும்
என்று கூறி எமை விழிப்புணர்வு கொள்ளச் செய்த வெற்றியின் சிகரமே வருக! வருக!
இயற்கையின் பாதுகாவலரே!
உங்கள் தாயோ உங்களைப் பத்து மாதம் தான் சுமக்கிறாள்
நானோ ஆயுள் முழுதும் சுமக்கிறேன்.
என்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். இயற்கை அன்னை நம் கையில் தந்திருப்பது
அட்சய பாத்திரம். அதைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடாதீர் என்று எம்மை எச்சரித்தீர்!
இயற்கையின் பாதுகாவலரே வாரீர்! வாரீர்!
சுற்றுச்சூழல் ஆர்வலரே!
எம்பள்ளியால் எமக்குப் பெருமை! எம்மால் பள்ளிக்குப் பெருமை என்று உணர
வைத்தீர். மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பேணிப் பாதுகாக்கும் பள்ளிக்குப் பரிசு என்று
அறிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலரே வருக ! வருக !
என்றென்றும் நன்றியுடன்,
மாணவ மாணவியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
பூஞ்சோலை.
நாள் – 03-08-2025
இடம்- பூஞ்சோலை.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. அனுப்புநர்
மு.மகிழன்,
ஒன்பதாம் வகுப்பு – 'அ' பிரிவு,
அரசு உயர்நிலைப்பள்ளி,
சின்கோனா,
வால்பாறை 642 106.
பெறுநர்
வகுப்பு ஆசிரியர் அவர்கள்,
ஒன்பதாம் வகுப்பு – 'அ' பிரிவு,
அரசு உயர்நிலைப்பள்ளி,
சின்கோனா,
வால்பாறை 642 106.
ஐயா,
பொருள் : பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி
வேண்டி விண்ணப்பித்தல் சார்பு.
வணக்கம். என் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். நான்
இன்று மாலை 4 மணிக்கு அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்ல வேண்டியுள்ளது. எனவே, இன்று மாலை மூன்று மணிக்குப் பள்ளி நேரம் முடிவதற்கு முன்பே வீட்டிற்குச்
செல்ல எனக்கு அனுமதி வழங்குமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள மாணவன்,
XXXXXX
சின்கோனா
12. 06. 2025
பெற்றோர் கையொப்பம்
XXXXXX
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
விடை அளிக்க 1x8=8
25. அ. அ. "நீரின்று அமையாது உலகம்" என்கிறார் திருவள்ளுவர். மழையே பயிர்க்
கூட்டமும் உயிர்க்கூட்டமும் மகிழ்ச்சியாக வாழப் பெருந்துணை புரிகிறது.
"மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை
ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில்
வளர்கின்றன" என்று மாங்குடி மருதனார் கூறியுள்ளார்.
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம். இவற்றுள் முதல் இரண்டும் வேளாண்மையை
அடிப்படையாகக் கொண்டவை. வேளாண்மையோ நீரை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
நம் முன்னோர் நீர் நிலைகளை வடிவமைத்தனர்.
"உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே"
என்கிறது புறநானூறு.
மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும்போது 'குமிழித்தூம்பு' என்ற அமைப்பைப் பயன்படுத்தினர் சோழர்கள்.
நீரோடித் துளை சேறோடித் துளை என்று இரு வகையில் நீர் வெளியேறும்படி
செய்திருக்கிறார்கள்.
குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம்
உருவாக்குதல் வேண்டும். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. 🌟"வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ்வோர் போகிய பேரூர் பாழ்" - தனிமகனார் (நற்றிணை 153)
🌟தமிழர்கள் 8 கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நியூசிலாந்திலிருந்து
அலாஸ்கா வரை பரந்து போய்ப் புலம்பெயர் தமிழர்கள்
10 லட்சம் பேர் வாழ்கிறார்கள்.
🌟ஜனவரி 14ஆம் நாள் தமிழர் பாரம்பரிய நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 'வன்னி வீதி' என்று ஒரு புதிய சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
🌟ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும்; அறிவைச் சாகடித்து விட்டால் மனிதன் செத்து
விடுவான்.
🌟இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகு. புலம்பெயர் நாடுகளில்
தமிழ் கற்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
🌟எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அருகில்
உள்ள 'கொக்குவில்' கிராமத்தில் பிறந்தவர். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அன்று
புலம்பெயரும் போது அவர் தன்னோடு ஒரு புத்தகத்தைத்தான் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
🌟வேலை தேடிப் பல நிறுவனங்களுக்குச் சென்றவர்கள், இன்று வரை உயிர்தப்பி வாழ்வதையே தங்கள்
திறமையாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.
🌟புதுநாடு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியும் அகதியாக வாழ்வதன் வலியையும்
சுமந்து கொண்டே இருக்கிறார்கள்.
🌟ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு.
🌟பல்வேறு அயலகப் பகுதிகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களின்
பங்களிப்பை ஏற்கவும் 'தாய்மண்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
