கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, July 24, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-07-2025. வியாழன் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24-07-2025. வியாழன் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : பொறையுடைமை ; 

குறள் எண் : 153.

குறள் :

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம்:

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்;

வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

பழமொழி :

›திட்டமில்லாத இலக்கு வெறும் ஆசையே.

A goal without a plan is just a wish.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2. ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடும் சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

+ மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது .மேலும் மனதை மாற்ற முடியாதவர்கள் எதையும் மாற்ற முடியாது -பெர்னாட்ஷா.

பொது அறிவு :

01. ஓவிய மேதை பாப்லோ பிக்காசோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஸ்பெயின்(Spain)

02. உலகில் முதன் முதலில் மிதக்கும் அணு உலையை உருவாக்கிய நாடு எது? அதன் பெயர் என்ன?

ரஷ்யா (அகாடமிக் லோமோனோசோவ்) Russia(Akademik Lomonosov)

English words :

violate - to break a rule or agreement, ஒரு சட்டம், விதி, ஓர் ஒப்பந்தம் முதலியவற்றை மீறுதல்

Grammar Tips:

Usage of from and since

"From" marks the beginning of a period, action, or event.

"Since" indicates a point in time from which something continues up to the present.

Ex:

"The store is open from 9 am to 5 pm."

"She has been working here since 2020."

அறிவியல் களஞ்சியம் :

செல்பேசியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன. அக்கதிர்வீச்சுகளிலிருந்து நிறைய நோய்கள் உடலில் குடியேறுகின்றன. அவை:- தோலில் தடிப்புகள் உண்டாதல் - தலைமுடி கொட்டுதல் - மூளையில் உள்ள நரம்புச் செல்கள் பாதிப்படைதல் இரத்த நாளங்கள் அழிதல் தைராயிடு சுரப்பிகள் கெடுதல் -தொற்று நோய்த் தாக்குதல் - லுக்கேமியா, 'லிம்போமா' போன்ற புற்று நோய்கள் ஏற்படுதல் - இன்னும், லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை!

ஜூலை 24

யஷ் பால் அவர்களின் நினைவுநாள்

யஷ் பால் (Yash Pal,

பிறப்பு 26 நவம்பர் 1926 - இறப்பு 24 சூலை 2017.

இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் முதலில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். அறிவியலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கலிங்கா விருதை வழங்கிச் சிறப்பித்தது. இந்திய அரசின் பத்ம பூசண் விருதை 1976ஆம் ஆண்டில் பெற்றார். 2013ஆம் ஆண்டில், பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

உதவாத நண்பர்கள்

ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு,அதுல ஒரு முயல் குட்டிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க எப்பவும் அந்த முயல்குட்டி அதோட நண்பர்கள் கூடவே இருக்கும் என்ன நிகழ்ச்சி நடந்தாலும் தன்னோட நண்பர்கள் கிட்டயே நேரத்தை செலவிடும். ஒருநாள் அந்த காட்டுக்கு ஒரு வேட்டைக்கார கும்பல் வந்துச்சு, அவுங்க நிறைய வேட்டை நாய்கள் வச்சிருந்தாங்க, அந்த நாய்கள் எல்லாம் மிருகங்களை தொரத்தி வேட்டைக்காரங்க பிடிக்க உதவி செஞ்சுகிட்டு இருந்துச்சுங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா இந்த முயல் குட்டிய அந்த வேட்டை நாய்கள் பாத்துடுச்சுங்க. உடனே அந்த நாய்கள் எல்லாம் முயலை தொரத்த ஆரம்பிச்சதுங்க உடனே அந்த முயல் தன்னோட மான் நண்பர்கிட்ட ஓடிப்போயி என்ன காப்பாத்துங்க மான் நண்பரேனு சொல்லுச்சு அதுக்கு மான்குட்டி என்னால முடியாதுனு சொல்லிடுச்சு .அடுத்ததா பக்கத்துல இருந்த குரங்கு நண்பர் கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு, அதுக்கு குரங்கும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு அடுத்து கரடி நண்பர்கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு, அதுவும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு.

அதுக்கு அப்புறமாத்தான் முயலுக்கு தோணுச்சு ஒரு ஆபத்துனு வரும்போது தன்னோட நிலைமையை தான்தான் சரி பண்ணிக்கிடனும் இன்னொருத்தர நம்பக்கூடாதுனு தோணுச்சு உடனே பக்கத்துல இருக்குற அடர்ந்த புதற்குள்ள போயி,ஆடாம அசையாம உக்காந்துகிட்டு இருந்துச்சு,அந்த வேட்டை நாய்கள் கொஞ்ச நேரம் தேடிட்டு போயிடுச்சுங்க .அதுக்கு அப்புறமா நண்பர்களை பொழுது போக்குக்கு மட்டும் வச்சுக்கிட்டு முழுமையா நம்புறதை விட்டுட்டு ரொம்ப நாள் வாழ்ந்துச்சு அந்த முயல்.

நீதி - தன் கையே தனக்கு உதவி

இன்றைய செய்திகள் 24.07.2025

*MBBS, BDS அவகாசம் மருத்துவப்படிப்பு-விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால

* வங்காளதேச விமான விபத்து -மருத்துவர்கள் குழுவை அனுப்பிய இந்தியா

* புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

* அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

*விளையாட்டுச் செய்திகள்

சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

ENG vs IND 4th Test இங்கிலாந்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் பட்டியலில் இணைந்த கே.எல். ராகுல்

Today's Headlines 24.07.2025

* Deadline to revise and submit the applications for MBBS, BDS Medical Courses is extended

* India sent our medical team and doctors to Bangladesh for an Air Crash accident.

* Preparations for election to choose new vice president began

*Trump announced the biggest trade deal between America and Japan.

SPORTS NEWS

China Open Badminton: PV Sindhu won in the first round

ENG vs IND 4th Test: KL Rahul joins record list by scoring over 1000 runs in England.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive