கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 28, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு துன்பத்தை வெல்லும் கல்வி ஆகஸ்ட் 3 - 2026

 6th tamil model notes of lesson

lesson plan august 3


ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-08-2026 முதல் 07-08-2026

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கண்ணெனத் தகும் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

துன்பத்தை வெல்லும் கல்வி

6.பக்கஎண்

44-46

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.கற்றல் நோக்கங்கள்

கல்வியின் சிறப்பையும் பயனையும் அறிதல்.

கல்விப்பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறிதல்.

9.நுண்திறன்கள்

சரியான ஒலிப்புமுறையில் குரல் ஏற்ற இறக்கத்துடன் ஒப்புவித்தல்.

எதுகை, மோனை, இயைபு, சந்தம் முதலானவற்றைக் கருத்தில்கொண்டு பாடல்களின் நயம்பாராட்டுதல்.

கற்றவரின் சிறப்பை அறிந்துகொள்ள முயலும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2018/10/6_1.html 

          https://tamilthugal.blogspot.com/2018/10/blog-post.html 

          https://tamilthugal.blogspot.com/2022/09/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1_29.html 

          https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-6th-tamil-thunbam-vellum-kalvi.html 

          https://tamilthugal.blogspot.com/2024/09/2-1_18.html 

11.ஆயத்தப்படுத்துதல்

கல்வியின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த நற்பழக்கங்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

நல்லொழுக்கப் பண்பாடுகளைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வெற்றி, விருது, பெருமை, புகழுடன் வாழக் கவிஞர் கூறும் அறிவுரைகளை மாணவர்களுடன் கலந்துரையாடுதல். புதிய சொற்களுக்கு அகராதியில் பொருள் அறிதல். குழுவாக வாசித்தல்.

          கற்றலின் அவசியத்தைக் குழுவாகப் பகிர்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வியின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். புகழோடு வாழும் வழிமுறைகளை அறியச் செய்தல், பின்பற்றுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       நாம் .................................... சேரக்கூடாது

          ந.சி.வி –       நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

          உ.சி.வி –      உங்கள் வருங்காலக் கல்வி குறித்த திட்டங்களைச் சிந்தித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வி பற்றிய பழமொழிகள் 5 எழுதுக.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive