கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, July 22, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2025. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

22-07-2025. செவ்வாய் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : அடக்கமுடைமை ; 

குறள் எண் : 121.

குறள் :

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

விளக்கம் :

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

பழமொழி :

தினசரி சிறு முயற்சிகள் பெரிய வெற்றிகளை உருவாக்கும்.

Small efforts every day add up to big results.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2. ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடும் சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. பிறருடைய முதுகில் ஏறி பயணம் செய்ய நினைக்காதே.- நியேட்சே.

பொது அறிவு :

01.நெப்டியூன் கிரகம் சூரியனை சுற்றிவர எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது?

165 புவி ஆண்டுகள் (165) Earth years)

02. தேசிய சுற்றுலா தினம் என்று கொண்டாடப்படுகிறது?

சனவரி 25 (25 January)

English words:

avian-related to a bird.பறவை சம்பந்தப் பட்ட.

aspire to have a strong desire to do something.

அழுத்தமான விருப்பம்

Grammar Tips:

The bridge rule

When u hear /j/ sound at the end of the words use -dge after short vowels otherwise -ge only

Ex short vowel

Ju*dge*, bri*dge*

Pa*ge*, ca*ge*

அறிவியல் களஞ்சியம் :

பாக்ஸ் பி2 மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ் பி2 புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்குழந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால்தான்! சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.

ஜூலை 22

பை-தோராய-நாள்

பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். பை (r) என்பது 3.14 என்ற தசம மதிப்பைக் கொண்டுள்ளது. 1706 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தைக் குறிக்க R குறியீட்டை உருவாக்கினார், பின்னர் இது சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பை தோராய நாள் ஜூலை 22 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் பை நாள் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்

ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா, விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு துண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.

அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும்படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.

அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தன.

அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் "நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் " என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.

குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்..! "இதோ உங்கள் மோதிரம்" என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.

இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். "செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது" மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை தமிழாக்கம்: ஆல்பர்ட் "ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.

இன்றைய செய்திகள் 22.07.2025

* சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

* இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது.

* இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ விபத்து: 5 பேர் பலி

விளையாட்டுச் செய்திகள்

*மகளிர் செஸ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஹம்பி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

Today's Headlines - 22.07.2025

* New Chief Justice of Chennai High Court takes Oath.

* China has started building a huge dam worth Rs. 14.46 lakh crore on the Brahmaputra River, which flows in Tibet near the Indian border.

*5 died in luxury cruise ship fire in Indonesia

SPORTS NEWS

Indian player Humpy advances to semifinals of Women's Chess World Cup

Australia wins first T20 against West Indies

2025 Chess World Cup to be held in India, announced.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive