மதிப்பீட்டுச் செயல்பாடு:
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.
இவற்றைப் போல மனிதனும் தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை.
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
1. படத்திற்குப் பொருத்தமான தொடரைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.
எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.
உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை.2. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை – என்னும் தொடர் உணர்த்தும் கருத்து யாது?
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும்.
3. யாரால் உலகம் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
4. பத்தியிலுள்ள இரண்டு எதிர்ச்சொற்களை எடுத்தெழுதுக.
தனக்கென - பிறர்க்கென
வாழாமல் - வாழ
5. பத்தியின் மையக்கருத்தை எழுதுக.
மனிதநேயம்
6. பத்தியிலிருந்து இரண்டு வினா உருவாக்குக.
1.பிறர்க்கென வாழ்வதற்கு என்னென்ன தேவை?
2.மனிதநேயம் என்றால் என்ன?