மதிப்பீட்டுச் செயல்பாடு
1. வகுப்பில் நடந்த பின்வரும் நிகழ்வினை வரிசைப்படுத்தி எழுதுக. இந்நிகழ்வினைக் கதையாகக் கூறுக.
எ.கா.
1. வளவனும் பாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
2. வளவன் எல்லாருக்கும் முன்பாக முதலில் பள்ளிக்கு வந்துவிட்டான்.
3. வளவன், காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தான்.
4. திடீரென்று வளவன் மயங்கி விழுந்தான்.
5. என்ன சத்தம்? எனக் கேட்டார்.
6. விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர் உள்ளே வந்தார்.
1.வளவன், காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தான்.
2.வளவன் எல்லாருக்கும் முன்பாக முதலில் பள்ளிக்கு வந்துவிட்டான்.
3.வளவனும் பாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
4.திடீரென்று வளவன் மயங்கி விழுந்தான்.
5.விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர் உள்ளே வந்தார்.
6.என்ன சத்தம்? எனக் கேட்டார்.
2. கதையைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
எறும்பும் புறாவும்
எறும்பு ஒன்று ஆற்றுநீரில் அடித்துச் செல்லும்போது மரத்திலுள்ள புறா ஒன்று அதைப் பார்த்தது. உடனே மரத்தில் உள்ள இலையைப் பறித்து தண்ணீரில் போட்டது.
அதைப் பார்த்த எறும்பு அந்த இலையின் மேல் ஏறி தப்பித்துக் கொண்ட து. ஒருநாள் வேடன் ஒருவன் மரத்திலுள்ள புறாவைக் கொல்வதற்காக வில்லில் இருந்து அம்பை எய்தினான்.
அப்பொழுது அதைப்பார்த்த எறும்பு, அவனது காலைக் கடித்து விடுகிறது. அம்பு திசைமாறிச் சென்று விடுகிறது. புறா அதை அறிந்து தப்பித்து விடுகிறது. உரிய காலத்தில் ஒருவர் செய்யும் உதவியானது, அவருக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்ற நீதியை இக்கதை உணர்த்துகிறது.
வினாக்கள்:
1.இப்பத்தியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
எறும்பு, புறா, வேடன்.
2. புறா மரத்தில் உள்ள இலையைப் பறித்துத் தண்ணீரில் போட்டதற்கான காரணம் என்ன?
ஆற்றுநீரில் அடித்துச் சென்ற எறும்பைக் காப்பாற்ற.
3. இக்கதையின்வழி உணரப்படும் பண்பு யாது? இப்பண்பு வெளிப்பட்ட நிகழ்வு ஒன்றனைக் குறித்துப் பேசுக.
உரிய காலத்தில் செய்யும் உதவி மிகப் பெரியது.
தேர்வு நேரத்தில் என் எழுதுகோல் தொலைந்துபோன போது என் நண்பன் கொடுத்து உதவினான்.
4. இக்கதையிலிருந்து இரண்டு வினாக்களை உருவாக்குக.
1. எறும்பு ஏன் வேடனின் காலைக் கடித்தது ?
2. வேடன் எதைக் கொல்ல குறி வைத்தான் ?