மதிப்பீட்டுச் செயல்பாடு :
1. பொருள் தருக.
காணல் - காணுதல்
கானல் - பாலைவனம்
அனல்- நெருப்பு
அணல் - கழுத்து
பலம் - உறுதி
பழம் - கனி
அறம் - உதவி
அரம் - கருவி
தலை - உடல்உறுப்பு
தளை - கட்டுதல்
கலை - ஓவியம், இசை முதலியன
களை - தேவையற்றது
கரை - ஆற்றின் ஓரம்
கறை - அழுக்கு
பரவை - கடல்
பறவை - பறக்கும் உயிரினம்
2. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
அ. பூனைக்குப் பிடித்தது _____________ (பால்/பாழ் ). பால்
ஆ. விண்ணின் துளி _____________ (மலை/மழை). மழை
இ. காட்டில் இருப்பது _____________ (மரம் /மறம்). மரம்
ஈ. மீன் பிடிக்க உதவுவது _____________ (வளை / வலை). வலை
உ. ஆடு உண்பது _____________ (தழை /தலை). தழை
ஊ. ஓவியம் என்பது ஒரு _____________(களை /கழை /கலை). கலை
எ. மனதில் _____________ கொள்ளல் வேண்டும். (உறுதி /உருதி). உறுதி
ஏ. ஓணான் மரத்தில் _____________ (ஏரியது /ஏறியது ). ஏறியது
ஐ. நாய் என்பது ஒரு வீட்டு _____________ (விலங்கு /விளங்கு /விழங்கு). விலங்கு
3. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு சரியான இரண்டு தொடரை எழுதுக.
(எ.கா. ) வேந்தன் / கேட்டது / குரல் / சொன்னார் / குறள்.
வேந்தன் குறள் சொன்னார்.
வேந்தன் குரல் கேட்டது.
அ. கண்ணன் / வழியில் / துடித்தான் / சென்றான் / வலியால்.
கண்ணன் வழியில் சென்றான்.
கண்ணன் வலியால் துடித்தான்.
ஆ. குரங்கு / மறத்தில் / தமிழர்கள் / மரத்தில் / சிறந்தவர்கள் / ஏறியது,
குரங்கு மரத்தில் ஏறியது.
தமிழர்கள் மறத்தில் சிறந்தவர்கள்.
4. சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ. ஒலி - வெளிச்சம்
ஆ. ஒளி - அரசன்
இ. இரை - ஓசை
ஈ. இறை - உணவு
ஒலி - ஓசை
ஒளி - வெளிச்சம்
இரை - உணவு
இறை - அரசன்
5. பின்வரும் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
ஆனி (மாதம்), ஆணி (சுவரில் அடிப்பது), விலங்கு (உயிரினம்), விளங்கு (திகழ்தல்), தினை (தானியம்), திணை (ஒழுக்கம்)
ஆனிக்குப் பிறகு ஆடி.
ஆணியில் படத்தை மாட்டினான்.
நாய் நன்றியுள்ள விலங்கு.
நீ புகழுடன் விளங்கு.
தினைச் சோறு உண்டோம்.
திணை தமிழர்களின் பண்பு.