மதிப்பீட்டுச் செயல்பாடு :
1. முழக்கத் தொடர்களை நிறைவு செய்க.
மழை நீர் நம் ஒவ்வொருவரின் ______________.
உயிர்நீர்
விண்ணின் மழைத்துளி ______________.
மண்ணின் உயிர்த்துளி
கால ம் ______________ போன்றது.
பொன்
2. பத்தியைப் படித்துணர்ந்து முழக்கத்தொடர்களை உருவாக்குக.
இயற்கையின் அங்கங்கள் மலைகள்; மலர்கள் பல கொண்ட நீலவண்ண மலைகள்; பனிமூடிய வெள்ளி மலைகள்; பச்சை மரங்களை ஆடையாய்க் கொண்ட பசுமலைகள்; ஆகாயத்தின் நீலவண்ணமும் பனியின் வெண்மையும் மென்மையும் கலந்த பனிமலைகள் பச்சையம் போர்த்திய துளிர்மலைகள்! இவற்றைப் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது ஒரு பொழுதுபோக்கு! மனத்திற்கு நிறைவையும் அமைதியையும் தரும்.
இவ்விடங்களில் நாம் என்ன செய்துவருகிறோம்?
நெகிழிப்பைகளில் உணவை எடுத்துச்சென்று உண்டுவிட்டு அவற்றை அங்கேயே தூக்கியெறிந்துவிடுகிறோம். பசுமை போர்த்திய மலைகள் இன்று நெகிழி சூழ்ந்துகிடக்கின்றன. இயற்கை குறித்த விழிப்புணர்ச்சியை நாம் இன்னும் பெற வில்லையோ ? என நெருடலாக இருக்கிறது!
நெகிழியை ஒழிப்போம், பூமியைக் காப்போம்.
சுற்றுச்சூழல் காப்போம், இயற்கையைப் போற்றுவோம்.
இயற்கையைக் காக்க செயற்கை தவிர்ப்போம்.
வேண்டாம் வேண்டாம், நெகிழி வேண்டாம்.
3. பின்வரும் தலைப்புகள் குறித்து முழக்கத்தொடர் உருவாக்குக.
கல்வியின் சிறப்பு
தலைகுனிந்து படிப்போம், தலை நிமிர்ந்து நடப்போம்.
உடல்நலம் பேணுதல்
உடற்பயிற்சி செய்வோம், உடல் நலம் காப்போம்.
இயற்கையைப் பேணுதல்
செயற்கை நெகிழி தவிர்த்து இயற்கை வளம் காப்போம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் காப்போம் நலமுடன் வாழ்வோம்.
சேமிப்பின் சிறப்பு
சிறுதுளி பெருவெள்ளம்
சிக்கனத்தின் தேவை
சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்.
4. படம் உணர்த்தும் கருத்தை முழக்கத்தொடராக மாற்றுக.