மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. பொருத்துக.
சொற்றொடர் - நிறுத்தக்குறி
அடடா நீங்கள் வந்ததைப் பார்க்கவில்லையே
உணர்ச்சிக்குறி/ வியப்புக்குறி (!)
காற் புள்ளி (,)
எனக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும்
முற்றுப்புள்ளி (.)
பனிமலை உருகிப்போகிறதே ஏன்
வினாக்குறி (?)
2. பின்வரும் பத்தியில் நிறுத்தக் குறி பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை எடுத்து எழுதுக.
நண்பா ! நண்பா ! எங்கே இருக்கிறாய்? என் ஆருயிர் நண்பா ! இங்கேயா இருக்கிறாய்?
ஐயோ ! வலையில் மாட்டிக் கொண்டாயே ! கத்துவதற்குக்கூட வழியில்லாமல் இப்படிக் கம்பிவலையில் சிக்கிக் கொண்டாயே. சரிசரி! நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன், கேள். விவசாயி அருகில் வரும்போது நீ இறந்துவிட்ட து போல் நடி; அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையிலிருந்து விடுவித்தவுடன் நான் மரத்திலிருந்து கா! கா! கா! என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்துக் கொள்.
சொற்கள் - நிறுத்தக்குறி
நண்பா ! நண்பா ! - வியப்புக்குறி
எங்கே இருக்கிறாய்? - வினாக்குறி
ஆருயிர் நண்பா ! - வியப்புக்குறி
இங்கேயா இருக்கிறாய்? - வினாக்குறி
ஐயோ ! வலையில் மாட்டிக் கொண்டாயே ! - வியப்புக்குறி
சிக்கிக் கொண்டாயே. - முற்றுப்புள்ளி
சரி சரி! - வியப்புக்குறி
சொல்கிறேன், - காற்புள்ளி
கேள். - முற்றுப்புள்ளி
அசையாமல் இரு. - முற்றுப்புள்ளி
கா! கா! கா! - வியப்புக்குறி
கொடுக்கிறேன், - காற்புள்ளி
உடனே தப்பித்துக் கொள். - முற்றுப்புள்ளி
3. கீழ்க்காணும் தொடர்களுக்கு நிறுத்தக் குறியிட்டு எழுதுக.
1. ஆடுகள் மாடுகள் நாய்கள் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன்.
ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன்.
2. இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியா நண்பரே வருக
இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியா நண்பரே ! வருக !
3. நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்
நான், நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
4. திருக்குறளில் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகள் உண்டு
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகள் உண்டு.
5. தந்தை மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி
தந்தை, மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி!
6. இன்னும் இரு நாள்களில் பருவமழை பெய்யும்
இன்னும் இரு நாள்களில் பருவமழை பெய்யும்.
7. எவ்வளவு பெரிய மலை
எவ்வளவு பெரிய மலை!