கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 06, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7.அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி seventh Tamil refresher course answer key 7th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு

சலசலக்கும் நீரோடையில் பயந்து பயந்து மான் ஒன்று மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்து மசமசவென நிற்காமல் மடமடவென நீர் பருகியது. அங்கே பதுங்கிப் பதுங்கி வந்த புலி ஒன்று திகுதிகு எனத் தீப்பொறி தெறிக்கும் கண்களால் குறுகுறுவென மானைப் பார்த்தது. தொலைவில் இருந்து இதனைக் கண்ட இருவர் வெலவெலத்துப் போய்க் கால்கள் வெடவெடவென நடுநடுங்கப் ’புலி புலி‘ என கத்தவும் துணிவின்றிச் செய்வதறியாது திருதிருவென விழித்தனர். அப்போது முதலைக்குட்டி மெதுவாய் நீந்திவர, புலியின் கவனம் சற்றே சிதறியது. அச்சமயம் மரக்கிளை சடசடவென முறிந்தது.

1. இப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி சொற்களை எடுத்து எழுதவும்.

அடுக்குத் தொடர்

பயந்து பயந்து, பதுங்கி பதுங்கி, புலிபுலி.

இரட்டைக்கிளவி

சலசல, மலங்க மலங்க, மச மச, மடமட, திகுதிகு, குறுகுறு, வெலவெலத்து, வெடவெட, நடுநடுங்க, திருதிரு, சடசட.

2. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(சலசல , கலகல, மளமள)

மிட்டாயைப் பார்த்ததும் குழந்தை கலகல எனச் சிரித்தது.

ஆற்றில் நீர் சலசல என ஓடியது.

நேரமாகிவிட்டதால் சங்கவி வீட்டுப்பாடங்களை மளமள என்று எழுதினாள்.

3. தொடர் அமைத்து எழுதுக.

அ. கொழுகொழு     ஆ. நன்று நன்று

அ. நாய் கொழுகொழு என இருந்தது.

ஆ.ஆசிரியர் நன்று நன்று எனப் பாராட்டினார்.

4. ‘வெடவெடத்து – பாம்பு பாம்பு’ – ஆகிய இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் இரண்டையும் சேர்த்துப் பொருளுள்ள ஒரு தொடராக எழுதுக.

கோபி இருளில் கயிற்றைக் கண்டு வெடவெடத்து பாம்பு பாம்பு என்று கத்தினான்.

தமிழ்த்துகள்

Blog Archive