மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கவிஞர் தமிழ்ஒளி குறித்துப் பேசுக.
கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் விஜயரங்கம்.
இவர் பாரதிதாசனின் மாணவர், இவர் எழுதிய 'சிற்பியின் கனவு' என்னும் மேடை நாடகம் 'வணங்காமுடி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை போன்ற குறுங்காவியங்களைப் படைத்தார்.
2. கவிஞர் பாரதிதாசன் பாடல்களுள் உனக்குப் பிடித்த ஒரு பாடலைப் பாடநூலில் இருந்து எடுத்தெழுதுக.
"தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"
3. பின்வரும் கவிஞர் வாணிதாசனின் பாடலைப் படித்து அது குறித்த உங்கள் கருத்தை ஒரு பத்தியில் எழுதுக.
"மழையே ! மழையே ! வா வா
வாழ்வின் உயிரே வா வா
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்
ஏரி குளங்கள் நிறைந்திடவும்
எருமை மாடு களித்திடவும்
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்
மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்
தெருவில் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்
காடு கரம்பு துளிர்த்திடவும்
காளை மாடு கொழுத்திடவும்
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயாது இசையை மீட்டிடவும்
தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்
குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும். . . "
மழையின் இன்றியமையாமையைக் கூறுகிறார். மழையை யாரெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மழையினால் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் உரிய தேவையாக மழை உள்ளது என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
4. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் அப்பாவின் வேஷ்டி என்ற கதையை உங்கள் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்க . அது குறித்த உங்கள் கருத்தை ஆசிரியரிடமும் வகுப்பு மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்க .
நீங்கள் பகிரவிரும்பும் கருத்து:
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர் என பிரபஞ்சன் கூறியுள்ளார். அப்பாவின் நினைவுகளை அள்ளித்தரும் சிறுகதை இது.