மதிப்பீட்டுச் செயல்பாடு: 1
பின்வரும் நிகழ்வைப் படித்து செயலையும் நற்பண்பையும் எழுதுக.
இரவியும் கண்ணனும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இரவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். அந்நாளில் இரவியின் வீட்டிற்குக் கண்ணன் வந்திருந்தான் . அப்பொழுது இரவியின் நாய் நீர்த்தொட்டியில் விழுந்ததால் கால் முறிந்துவிட்ட து. நண்பர்கள் இருவரும் நீர்த்தொட்டியில் இருந்து கவனமாக நாயை வெளியில் எடுத்தனர்; கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். மருத்துவர் அதற்குச் சிகிச்சை அளித்தார் . பின்னர் இரவியும் கண்ணனும் மருத்துவருக்கு நன்றி கூறி வீடு திரும்பினர். மறுநாள் இரவியின் பெற்றோரும் வீட்டிற்குத் திரும்பினர். இரவி, கண்ணன் இருவரின் செயலைக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினர்.
செயல்
நீர்த்தொட்டியில் இருந்து நாயை வெளியில் எடுத்தல்
நற்பண்பு
பிற உயிர்களிடம் அன்பு காட்டுதல்
செயல்
மருத்துவருக்கு நன்றி கூறுதல்
நற்பண்பு
நன்றி தெரிவித்தல்
செயல்
பெற்றோர் பாராட்டுதல்
நற்பண்பு
நற்செயலைப் பாராட்டுதல்
மதிப்பீட்டுச் செயல்பாடு : 2
பின்வரும் கதையைப் படித்துப் பார்த்துப் பட்டாம் பூச்சி என்ன பதில் கூறியிருக்கும் என்பதை எழுதுக.
பட்டம் ஒன்று வானத்தில் மிக உயரமாகப் பறந்து கொண்டிருந்தது. தான்
உயரமாகப் பறப்பதை எண்ணி அதிக ஆணவம் கொண்டிருந்தது. கீழே பூக்களின் மீது பறந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து “என்னைப் பார்த்தாயா! நான் வானத்தைத் தொடுமளவு மேலே பறக்கிறேன். ”நீயோ மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கிறாய்“ என்று பெருமை பேசியது, பட்டாம்பூச்சி பதிலுக்கு
நீ நூலின் துணையோடும் காற்றின் துணையோடும்தான் பறக்கிறாய்.
நான் என் சிறகின் துணையோடு பறக்கிறேன். பறக்கும் உயரத்தை என்னால் முடிவு செய்ய இயலும். உன்னால் முடிவு செய்ய இயலாது. உணர்ந்துகொள் பட்டமே.